இந்தியா – பாகிஸ்தான்: பதற்றமான சூழலில் பொறுமையை கடைபிடியுங்கள்- ஐ.நா பொது செயலாளர் வலியுறுத்தல்!

0

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என ஐ.நா பொது செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்க்கு 1949இல் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 1954ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரால் செயல்படுத்தப்பட்ட 35ஏ என்ற சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

மேலும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசமாக்கும் மசோதவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா மாநிலங்கவையில் மசோதா நிறைவேறியது.

இதனால் எல்லையில் பாதுகாப்பிற்காக அதிகளவு ராணுவ வீரர்கள் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் ஐ.நா பொது செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “சமீப காலமாக இரு நாடுகளும் தங்களின் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஐநா ராணுவ நடவடிக்கை கண்காணிப்பு குழு கண்காணித்து வருகிறது. தற்பொது பதற்றமான சூழல் நிலவுவதால் இரண்டு நாடுகளும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்” என்றார்.

Comments are closed.