இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையை தீர்க்க டிரம்ப்பிடம் உதவிக் கேட்டாரா மோடி?

0

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசியல் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்துப் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்டகாலமாக இருக்கும் கஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க இந்திய பிரதமர் மோடி என்னிடம் ஜி20 மாநாட்டில் சந்தித்த போது உதவி கேட்டார். அவர் இப்பிரச்சினையில்  நடுவராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார். நான் இரு நாடுகளுக்கும் இடையிலான மீடியேட்டராகவே இருந்து பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறேன்” என டிரம்ப் கூறியதாக செய்திகள் பரவியது.

ஆனால் டிரம்ப்பின் இக்கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான ரவீஷ்குமார் “கஷ்மீர் பிரச்சனைத் தொடர்பாக டிரம்ப்பிடம் எந்த கோரிக்கையையும் இந்தியா வைக்கவில்லை. இது இருநாட்டிப் பிரச்சனை.

எல்லையில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தையும் நடக்கும். எனவே இதில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவை இல்லாதது” எனத் தெரிவித்துள்ளார். 

Comments are closed.