இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை அவசியம்: இம்ரான கான் கடிதம்

0

கடந்த மாதம் 23ஆம் தேதி பாகிஸ்தானின் தேசிய தினம்  கொண்டாடப்பட்டது. அதற்கு பாகிஸ்தான்வ் பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி, கடிதம் எழுதியிருந்தார். அவரது வாழ்த்து கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ள இம்ரான்கான், இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை அவசியம் தேவை என கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூட இம்ரான்கான், மோடிக்கு எழுதிய கடிதத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முயற்சியாக இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

Comments are closed.