இந்தியா முழுவதும் மலர்ந்த தாமரை தமிழகத்தில் வாடியது!

0

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதிலிருந்தே பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. பீகார், உத்திரப்பிரதேசம், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், குஜராத், மகாராச்டிரா உட்பட நாட்டின் அதிகப்படியான மாநிலங்களில் பாஜக 335க்கும் அதிகமான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜக 5 தொகுதியில் போட்டியிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது திமுக 37 தொகுதிகளில் வெற்றி முகத்தை காடி வருகிறது. அதிமுக 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

மத்தியில் கடந்த 5 ஆண்டுகளாகவும், தற்போதும் ஆட்சியிலுள்ள பாஜக கட்சியால் தமிழகத்தில் தாமரையை மலர செய்ய முடியவில்லை. நாடு முழுவதும் தாமரையை மலர வைத்த பாஜக, தமிழகம் , கேரளா போன்ற தென் மாநிலங்களில் காலூன்ற முடியாதது அவர்களின் சோதனையாகவே உள்ளது.

Comments are closed.