இந்தியா வெளியிட்ட ஆதாரம் உண்மையானது இல்லை: பாகிஸ்தான் விளக்கம்

0

இந்தியா வெளியிட்ட ரேடார் காட்சிகள் உண்மையானது இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக கூறியது. இதுதொடர்பாக ஒரு அமெரிக்க பத்திரிகை வெளியிட்ட தகவலால் சந்தேகம் எழுந்தது. மேலும் எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய விமானப்படை தெரிவித்தது.

இந்நிலையில், இந்திய விமானப்படை துணைத்தளபதி கபூர் நேற்று  மீண்டும் உறுதிபட தெரிவித்தார். அவர் கூறியதாவது: “எப்-16 ரக விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது உண்மை. அதற்கான மறுக்க இயலாத ஆதாரங்களும், தகவல்களும் உள்ளன” என்று கூறினார். மேலும், பாகிஸ்தான் விமானம் சுடப்பட்டது தொடர்பான ‘ராடார்’ காட்சிகளை அவர் நிருபர்களிடம் காண்பித்தார்.

இந்த நிலையில், இந்தியா வெளியிட்ட ரேடார் காட்சிகள் உண்மையானது இல்லை என்று பாகிஸ்தான் புது விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் தனது டுவிட்டரில், இது தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.

Comments are closed.