இந்தியை வளர்ப்பதற்கு 4 ஆண்டுகளில் ரூ. 219 கோடி செலவு

0

இந்தியை வளர்ப்பதற்கு, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 219 கோடி அளவிற்கு செலவிடப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு மட்டும் ரூ. 69 கோடியே 33 லட்சம் செலவிடப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது, இந்தியை வளர்ப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? அதற்காக செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு? என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன? என்று உறுப்பினர் எழுப்பியிருந்தார்.

இதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் அறிக்கையில், “நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபிறகு 2014ஆம் ஆண்டில் ரூ. 48 கோடியே 30 லட்சம், 2015ஆம் ஆண்டு ரூ.49 கோடியே 60 லட்சம், 2016ஆம் ஆண்டு ரூ. 56 கோடியே 64 லட்சம் என நான்காண்டுகளில் சுமார் 219 கோடிரூபாய், இந்தி மொழியை வளர்க்கும்பல்வேறு திட்டங்களுக்கு செலவிடப்பட்டு உள்ளதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.