இந்திய ஊடகங்களில் கஷ்மீரிகளுக்கு எதிராக பரப்பப்படும் மோசமான பிரச்சாரம் அமைதி முயற்சிகளை பாதிக்கின்றது:சிறப்பு பிரதிநிதி

0

மத்திய அரசின் கஷ்மீருக்கான சிறப்பு பிரதிநிதியான திநேஷ்வர் ஷர்மா, குறிப்பிட்ட சில தொலைகாட்சி நிறுவனங்களின் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சந்திப்பு ஒன்றை நடத்தி அவர்கள் கஷ்மீரிகள் குறித்த மோசமான பிரச்சாரம் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

குறைந்தபட்சம் நான்கு குறிப்பிட்ட தொலைகாட்சி சானல்ககள் காஷ்மீர் குறித்து பரப்பும் உண்மைக்கு புறம்பாக பெரிது படுத்தப்பட்ட தங்களின் செய்திகள் மூலம் மத்திய அரசு கஷ்மீர் பள்ளத்தாக்கில் நடத்திவரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு கேடு விளைவிக்கின்றனர் என்றும் இந்த தொலைகாட்சி நிறுவன அதிகாரிகளுடன் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி இதனை தடுக்க வேண்டும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“சில நேரங்களில், இந்த தொலைக்காட்சிகள் மடுவை மலையாக காட்டுகின்றனர். பல நேரங்களில் இத்தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்கள் கள நிகழ்வுகளுக்கு முற்றிலும் மாற்றமாக உள்ளது. இது அரசுக்கு எதிராக மக்களிடம் வெறுப்பை தூண்ட பிரிவினைவாதிகளுக்கு தீனியாக அமைகிறது.” என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய உளவுத்துறையின் முன்னால் தலைவரான திரு.ஷர்மா கடந்த 2017 அக்டோபர் மாதம் கஷ்மீரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கென சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இவரை சந்தித்த பல குழுக்கள் கஷ்மீரை குறித்து குறிப்பிட்ட இந்த தொலைக்காட்சிகள் மோசமான செய்திகளை வெளியிடுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

திரு ஷர்மா தெரிவித்த கருத்துக்களை தொலைகாட்சி நிறுவனங்களுடன் தாங்கள் பகிர்ந்து கொண்டு கஷ்மீர் விஷயத்தில் அவர்கள் எல்லை மீறாமல் இருக்கும்படி கேட்டுக்கொள்ள இருபதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதே கருத்தை தான் கஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கஷ்மீரில் நடைபெறும் கல்லெறி சம்பவத்தில் நான்கு அல்லது அணைத்து நிறுவனங்களின் மாணவர்களே ஈடுபட்ட நிலையில் இந்திய ஊடகங்களோ மொத்தம் உள்ள 50000 பள்ளி கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் ஈடுபட்டது போன்று சித்தரித்தாக தெரிவித்துள்ளனர்

இருந்த போதும் பத்திரிக்கை சுதந்திரம் பாதிக்கபப்டாத வைகையில் இந்த பிரச்னையை மத்திய அரசு கையாளும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

Comments are closed.