இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ரயிலுக்கு அனுமதி மறுப்பு!

0
சீக்கியர்களின் மத குருக்களில் ஒருவரின் நினைவு தினம் அனுசரிக்கும் ஜோர்மீலா என்ற நிகழ்வு பாகிஸ்தான் நாட்டின் லாகூர் மாகாணத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் பலர் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியாவை சேர்ந்த 200 சீக்கிய யாத்திரிகர்களுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியிருந்தது. சீக்கிய யாத்திரிகர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து லாகூர் வருவதற்கு பாகிஸ்தான் அரசு சார்பில் சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிலையில் அவரது நினைவு தினத்தை அனுசரிக்கும் நிகழ்வுக்கு இந்தியாவின் பஞ்சாபில் இருந்து சீக்கிய யாத்திரிகர்கள் லாகூர் வருவதற்காக பாகிஸ்தான் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரெயிலினை இந்திய எல்லைக்குள் அனுமதிக்கவில்லை. இந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் சீக்கிய அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தங்கள் நாட்டு ரெயிலினை இந்திய எல்லைக்குள் அனுமதிக்க அந்நாட்டு அதிகாரிகள் மறுத்து விட்டதாகவும், அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எதுவும் கூறவில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது

Comments are closed.