இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மத் ஷாமி குடும்பத்தை குறிவைக்கும் மாட்டிறைச்சி

0

இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மத் ஷாமியின் தந்தையான தவ்சீப் அஹமத், தங்கள் குடும்பமும் மாட்டிறைச்சி விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் முஹம்மத் ஷாமியின் சகோதரர் முஹம்மத் ஹசீப் காவல்துறை அதிகாரிகளை தாக்கியதாகவும் காவல்துறையை பசுக்களை கொன்றதற்காக கைது செய்யப்பட்ட சில நபர்களை விடுதலை செய்ய நிர்பந்தம் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் தந்தை கூறுகையில், “இச்சம்பவம் நடந்த பொழுது என் மகன் அந்த இடத்தில் கூட இல்லை. அவன் அந்த இடத்திற்கே மிக தாமதமாக தான் வந்தான்.” என்றும் ” அவன் வெறும் பார்வையாளர் தான். தேவையில்லாமல் அவன் இந்த விவாகாரதிற்குள் இழுக்கப் பட்டுள்ளான்” என்றும் “ஷாமி விளையாட ஆரம்பித்ததும் எங்கள் குடும்பம் பிரசித்து பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் தான் இதை செய்துள்ளனர்” என்றும் கூறியுள்ளார்.

முஹம்மத் ஹசீபின் மீது இந்திய குற்றவில் சட்ட பிரிவு 147(கலவரம் செய்தல்), 147(பயங்கர ஆயுதம் தரித்து கலவரம் செய்தல்), 153(இரண்டு தரப்பினரிடையே பிரிவினையை ஏற்படுத்துவது), 332 (அரசு அதிகாரியை தன் பணி செய்யவிடாமல் இருக்க காயப்படுத்துவது), 224(சட்டப்பூர்வமான கைதை தடுப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இவரை அவருடையை உடல்நல குறைவை கருத்தில் கொண்டு பிணையில் விடுதலை செய்ததாக காவல்துறை கூறியிருக்கிறது.

Comments are closed.