இந்திய குழு பாலஸ்தீன எல்லைக்குள் செல்ல இஸ்ரேல் அனுமதி மறுப்பு !!!

0

இந்திய குழு பாலஸ்தீன எல்லைக்குள் செல்ல இஸ்ரேல் அனுமதி மறுப்பு !!!

இஸ்ரேல் அதிகாரிகளால் பாலஸ்தீன எல்லைக்குள் அனுமதிக்கப்படாத இந்திய தூதுக்குழு உறுப்பினர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இஸ்ரேல் உடனான இந்திய அரசின் சமாதானப்போக்கு அவர்களிடம் ஆணவப்போக்கையும் இந்தியர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதையும் அதிகரிக்க செய்துள்ளது என அக்கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளனர்.

மனித உரிமை ஆர்வலர்களான அக்னிவேஷ், ஜான் தயாள் மற்றும் அரசியல்வாதிகளான மணிஷங்கர் அய்யர், முஹம்மது சலீம் ஆகியோர் அக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

13 நபர்கள் கொண்ட அக்குழு ஏப்ரல் 12 ம் தேதி ரமல்லா நகரில் சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தது.

இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் எல்லையில் நிறுத்தி சோதனையிட்டபோது அக்குழுவில் இந்திய தூதரக பாஸ்போர்ட் வைத்திருந்தவர்களை அனுமதித்தனர். ஆனால் மற்றவர்கள் இந்திய பாஸ்போர்ட் மற்றும் உரிய அனுமதி ஆவணங்கள் வைத்திருந்த போதிலும் அவர்கள் அனுமதி மறுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு உரிய நடவடிக்கை உடனடியாக தேவை.இதற்கு இஸ்ரேல் மன்னிப்பு கேட்கவில்லையெனில் இந்திய அரசும் இந்தியாவிற்கு பயணிக்கும் இஸ்ரேல் நாட்டவர்களை அவர்கள் நடத்தியவாறே நடத்தவேண்டும் என அக்குழு கூறியுள்ளது.

Comments are closed.