இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: காக்கினாடாவில் அகில இந்தியக் காங்கிரஸ் தலைமை

0

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: காக்கினாடாவில் அகில இந்தியக் காங்கிரஸ் தலைமை

1921 நவம்பர் 1 இல் அலி சகோதரர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர். (History of Freedom Movement Vol. III, R.C.Majumdar, Calcutta, 1963, Page 875) கராச்சி வழக்கில் கர்னல் கயர் மற்றும் சர்க்கார் தரப்பு சாட்சிகளாக ஜமன்ஷா மாபூப் ஷா (வயது 48, காவல்துறை கண்காணிப்பாளர்) முகம்மது பக்ஷ், போலீஸ் கேசவலால், தலைமைக் காவலர் டே பகதூர், இரகசிய போலீஸ் உஸ்மான் கனி, அப்துல் கபூர், லக்கத் ஹூஸைனி, ஷான் பகதூர்கான், பர்னஸ் ஆகியோர் விசாரிக்கப்பட்டார்கள் (இந்தப் பெயர்கள் பல சிரமங்களுக்கு பின் பழைய ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்டன).

போலீசார் கைப்பற்றிய முகமதலியின் கடிதங்கள் 59. அதில் 6 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 17 கடிதங்கள் அரசாங்கத்தின் பார்வைக்காக சிம்லாவிற்கு அனுப்பப்பட்டது. 36 கடிதங்கள் மௌலானாவின் துணைவியார் பேகம் மௌலானாவிற்கு அனுப்பப்பட்டது.

வழக்கின் நான்காம் நாள் விசாரணையின் போது மௌலானா சௌக்கத் அலி விசாரிக்கப்பட்டார். ‘‘இறைவனின் வழியில் நான் ஈடுபட்டிருப்பதினால் என்னை நீங்கள் தூக்கிலிடவும் செய்யலாம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். தூக்கிட்டாலும் சரியே” என்று நீதிமன்றத்தில் முழங்கினார் சௌக்கத் அலி. (Life, Speeches & Trial of Mohamud Ali & Shaukat Ali By Krishnaswami Sarma, Congress Publicity Bureau, Sowcarpet, Madras, p.169 இரண்டாம் பதிப்பு விலை ரூ. 1)

…முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.