இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்

0

வரலாறு: இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்

காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டி 1,20,862 ரூபாய் காக்கி நாடா மாநாட்டிற்காகவே வசூல் செய்தது. அதில் கோதாவரி மாவட்டம் 51,105 ரூபாயும், காக்கிநாடா தாலுகா 24,005 ரூபாயும் அளித்தன. 26.12.1923 இல் காங்கிரஸ் மாநாடு நடைபெறுவதாக அறிவித்திருந்தது. C.R. தாஸ் வேண்டுகோள்படி 28.12.1923க்கு மாற்றப்பட்டது. மாநாட்டின் போது அகில இந்திய மகளிர் மாநாடு காந்தியடிகளின் துணைவியார் அன்னை கஸ்தூரிபாய் தலைமையில் 10,000பேர்கள் பங்கேற்க சிறப்பாக நடந்தது.

Indian National Social Conference சதாசிவ அய்யர் (சென்னை) தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய தொண்டர்படை மாநாடு முதன்முதலாக இங்குதான் பண்டித ஜவஹர்லால் நேரு தலைமையில் நடைபெற்றது. ஆச்சார்யா பிரபுல்லா சந்திரராய் மாநாட்டில் காதி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

120 ஏக்கர் நிலத்தில் காங்கிரஸ் மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. 12,000 பேர்கள் அமர்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கு. கி.ழி. முகர்ஜி அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பந்தலுக்காக அந்தக் காலத்திலேயே 23,500 ரூபாயும் தலைவர்கள் தங்கும் இதர கூடாரங்களுக்கு 13,500 ரூபாயும் வழங்கப்பட்டது. (மொத்தம் 37,000)

மாநாட்டுத் தலைவர் மௌலானா முகமதலியின் உரை ஆங்கிலத்தில் 4500 பிரதிகளும், ஹிந்தியில் 500 பிரதிகளும், உருதுவில் 1800 பிரதிகளும், தெலுங்கில் 5000 பிரதிகளும் அச்சிடப்பட்டன. மௌலானா முகமதலியின் உரையை இந்தியில் மொழிபெயர்க்க காசியிலிருந்து அறிஞர்கள் வரவழைக்கப்பட்டனர். டிம்மி சைஸில் ஆங்கிலத்தில்114 பக்கங்கள் கொண்டது அவரது ஆங்கில உரை மேற்கூறிய நூலின் தொகுதி 8 இல்184வது பக்கம் முதல் 308 வது பக்கம் வரை உள்ளது. ஆனால் 1972இல் சங்கர் கோஷ் தொகுத்து டெல்லியிலிருந்து காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட காங்கிரஸ் தலைமை உரை நூலில் மௌலானா முகமதலியின் உரை 149வது பக்கம் முதல் 164வது பக்கம் வரை 16 பக்கங்களே உள்ளது.

காக்கி நாடாவில் மௌலானா முகமதலிக்கு நடந்த வரவேற்பினை விளக்கியே ஆக வேண்டும். இலட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்து மௌலானா முகமதலியை வரவேற்றார்கள். 24.12.1923 பகல் 12 மணிக்கு காக்கிநாடாவிற்கு வரவேண்டிய இரயில் 3 மணி நேர தாமதத்தால் பிற்பகல் 3 மணிக்கு வந்தடைந்தது. காக்கிநாடா வருவதற்கு முன் ரயில் நிலையங்களில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் வரும் பாதையில் 50 அடிகளுக்கு ஒரு கொடி வீதம் நாட்டப்பட்டிருந்தது. தெலுங்கு, ஆங்கிலம், உருது, மொழிகளில் ‘சுயராஜ்ஜியம் நமது பிறப்புரிமை’ ‘ஏர்வாடா சிறையில் இருக்கும் காந்தி நலம் பெறவும்’ ‘காக்கிநாடா காங்கிரஸ் தலைமையை வரவேற்கவும்’ ‘இந்தியா ஒவ்வொரு குடிமகனிடமும் தனது கடமையை எதிர்பார்க்கிறது’ ‘இந்து முஸ்லிம் ஒற்றுமையின்றி சுயராஜ்ஜியம் இல்லை’ போன்ற பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

காக்கிநாடா ரயில் நிலையத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. தேசபக்த கொண்ட வெங்கடப்பய்யா, ஜனாப் அன்வரு ஜமான் கான்சாகிப் போன்றவர்கள் ரயில் நிலையத்தில் மௌலானா முகமதலியை வரவேற்றார்கள். ‘அல்லாஹ் அக்பர்’ ‘மகாத்மா காந்திக்கு ஜே’ முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. அன்வர் கான்சாகிப் அலி சகோதரர்களுக்கு மலர்க் கொத்துகள் கொடுத்து வரவேற்றார். ஸ்ரீமதி கஸ்தூரிபாய், பீ அம்மா (அலி சகோதரர்களின் தாயார்) மௌலானாவின் துணைவியார் ரயிலில் வந்து இறங்கினார்கள். வயதான பீ அம்மாவின் கம்பீரமான தோற்றம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

நான்கு ஆஸ்திரேலிய குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் மௌலானா முகமதலி, மௌலானா சௌக்கத் அலி, வெங்கடப்பய்யா, அன்வர் கான் சாகிப் அமர்ந்திருந்தனர். தனியாக மோட்டார் காரில் கஸ்தூரிபாய், பேகம் முகமது அலி மற்றும் பெண்கள் அழைத்துவரப்பட்டனர். மற்ற வாகனங்களில் டாக்டர் பிரபுல்லா சந்திர ராய், ஜனாப் யாகூப் ஹசன், டாக்டர் செய்புதீன் கிச்சலு, பீட்டர் ஜா விட்ஸ் கி, டி.பிரகாசம், கே.ராகேஸ்வர ராவ் ஆகியோர் பின் தொடர்ந்து வந்தனர்.

500 தொண்டர்கள்  வழியில் ஒழுங்குபடுத்திடும் பணியில், சயாபரசு வெங்கடராசு தலைமையில் செயல்பட்டனர். 100 பெண் தொண்டர்கள் நடந்தே வந்தனர்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.