இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: பெல்காம் காங்கிரஸ் மாநாடு

0

இந்தியாவின் விடுதலைக்காகப் பொங்கி எழுந்த தீரமிகு அலி சகோதரர்களைப் பெற்றெடுத்த வீரப்பெண்மணி பீ அம்மா அன்னையைப் பற்றி கொஞ்சமாவது சொல்லவில்லையென்றால் எனது கடமையில் தவறியவன் ஆவேன்.

பீ அம்மாவின் உண்மைப் பெயர் ஆபாதிபானு சாஹிபா. இவரின் 27வது வயதில் கணவர் அப்துல் அலிகான் மறைந்தார். மூத்த குழந்தைக்கு வயது பதிமூன்று. கடைசிக் குழந்தையான மௌலான முகம்மது அலிக்கு வயது இரண்டு. இளம் விதவையான பீ அம்மா தனது ஆறு குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றார்; அத்துடன் மறுமணம் செய்து கொள்ளவும் மறுத்துவிட்டார். ராம்பூரில் முதன் முதலில் தனது பிள்ளைகளை ஆங்கிலக் கல்விக்கு அனுப்பியவரும் அவரே. ஜுல்பிகார், முகமதலி, சௌக்கத் அலி மூவரும் ஆங்கிலக் கல்வி பயின்றவர்கள்.

பீ அம்மா புனித ஹஜ் யாத்திரைக்காக மக்கா நகர் சென்றிருந்த போது கஃபாவிலுள்ள கருப்புத் துணியைப் பற்றிக் கொண்டு துஆ கேட்டார்கள். தனது கடைசி இரு மக்களான சௌக்கத் அலியும், முகமதலியும் நாட்டிற்காகவும் இஸ்லாத்திற்காகவும் பாடுபடுபவர்களாக என்றும் விளங்க வேண்டும் என்று கேட்டார்கள். இறைவன் அவர்களது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். பின்னாளில் மௌலானா முகமதலியும் சௌக்கத் அலியும் உலகப் புகழ் பெற்றனர்.

முதல் தடவை 26.9.1914 காம்ரேட் இதழில் “Choice of the Turks” கட்டுரை எழுதியதற்காக 1915 இல் மௌலானா முகமதலியும், சௌக்கத் அலியும் கைது செய்யப்படும் போது, பீ அம்மாவும் புர்கா அணிந்து கொண்டு ‘‘என்னையும் கைது செய்யுங்கள்’’ என்றார். ‘இவ்விருவரையும் அழைத்துச் செல்லத்தான் எங்களுக்கு உத்தரவு’ என்ற போது பீ அம்மாவும் வேகமாக போலீஸ் வேனை நோக்கி நடந்தார்கள். அப்போது ரைட் என்பவர் ‘அந்த பெரிய அம்மாவை யாராவது தடுத்து நிறுத்துங்கள்’ என்றார். ‘‘அல்லாஹ் மீது ஆணையாக எங்களுடன் நீங்கள் வர வேண்டாம்’’ என்று மௌலானா முகமதலியும் சௌக்கத் அலியும் கேட்டுக் கொண்ட பிறகே அவர்கள் பின்னால் வரவில்லை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.