இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்

0

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்

இந்து & முஸ்லிம் ஒற்றுமைக்கு உழைத்த அலி சகோதரர்கள்

ஹோகட்டில் நடந்த மதக் கலவரத்திற்கு இந்துக்களும் – முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டினர். ‘இந்துக்கள்தான் முதல் முதலாக விஷமஞ் செய்தனர்’ இது முஸ்லிம்கள் கூற்று. ‘முஸ்லிம்கள்தான் அக்கிரமஞ் செய்தனர்’ இது இந்துக்கள் கூற்று. இதனை விசாரிக்க காங்கிரஸ் மகாசபை ஒரு கமிட்டியை நியமித்தது. காந்தியும், சௌக்கத் அலியும் இதர சிலரும் கமிட்டியில் இருந்தனர்.

இக்கமிட்டியினர் ஹோகட் செல்ல அரசாங்கம் அனுமதிக்கவில்லை. எனவே விசாரணை ராவல்பிண்டியிலேயே நடந்தது. முஸ்லிம்கள் பலர் சாட்சி சொல்ல வரவில்லை. ஓரிருவர் மட்டுமே சாட்சி கூறினார்கள். இந்துக்கள் பெரும்பான்மையினர் சாட்சியங் கூறினர். அறிக்கை வெளியாயிற்று. காந்தி முஸ்லிம்கள் மீது குறை கூறினார். ஆனால் மௌலானா சௌக்கத் அலி இதனை ஏற்கவில்லை. இருதரப்பினரும் சமமான முறையில் விசாரிக்கப்படவில்லை என்று சௌக்கத் அலி ஆதங்கப்பட்டார். சௌக்கத் அலி இடையே, காந்தி அபிப்பிராய பேதம் ஏற்பட்டது. மௌலானா முகமதலியோ, இரு சமூகத் தலைவர்களும் தங்கள் தங்கள் சமூகத்தாரை கண்டித்து அடக்க வேண்டும் என்று மூன்றாவது ஒரு வழியை சொன்னார்.

27.12.1923இல் காக்கினாடாவில் அகில இந்திய கிலாபத் மாநாட்டை மௌலானா சௌக்கத் அலி தலைமை தாங்கி நடத்தினார். மௌலானா முகமதலியும் கலந்து கொண்டார். அதன் பின் கல்கத்தாவில் 19.3.1924இல் மௌலானா முகமதலி தலைமையில் அகில இந்திய கிலாபத் மாநாடு நடைபெற்றது. 10.5.1924இல் பம்பாயில் மௌலானா சௌக்கத் அலி தலைமையில் அகில இந்திய கிலாபத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சாப் மாகாண கிலாபத் மாநாடு நடைபெற்றது. அதில் உரையாற்றிய மௌலானா முகமதலி,

‘ஒவ்வொரு சமூகமும் பிற சமூகத்தாரின் மீது குற்றஞ்சாட்டுவதற்கு இது நேரமல்ல. ஒவ்வொருவரும் தத்தம் சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டித்து உணர்த்துவதுதான் உசிதமானது. ஆதலால் ஹோகட் இந்து & முஸ்லிம் கலவரத்தில் முஸ்லிம்கள் மீது எவ்வளவு பொறுப்பு ஏற்படுகிறதோ, அதற்காக நான் அவர்களைக் கண்டிக்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

இதனால் மௌலானா முகமதலிக்கு முஸ்லிம்களிடையே செல்வாக்கு குறைய ஆரம்பித்தது. அதோடு மாகாண சட்டசபைக்கு காங்கிரஸ் சுயராஜ்ஜியக் கட்சியின் பெயரால் செல்ல அனுமதித்தது. ஆனால் மௌலானா முகமதலி கிலாபத் கமிட்டியினர் தங்களது சொந்தப் பலத்தின் அடிப்படையிலே சட்டசபைக்கு செல்லலாம், கிலாபத் கமிட்டி சார்பில் செல்லக் கூடாது என்று கூறினார். மௌலானா முகமதலியின் இத்தகைய போக்கினால் அவருடன் இருந்தவர்கள் பிரிய ஆரம்பித்தனர். எதிரிகளுடன் சேரவும் செய்தார்கள். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்


Comments are closed.