இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்

0

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்

“இது நமது தேசத்திற்கு சோதனைக் காலம். ஆகவே நீங்கள் ஆத்திரமடையக் கூடாது. உங்களுடைய செய்கையாலும் சொல்லாலும் யாரையும் ஆத்திரம் ஊட்டாதீர்கள். அவர்கள் அக்கிரமஞ் செய்தால் நீங்கள் பொறுமையாக இருங்கள்” என்று டெல்லி கிலாஃபத் விஷேச மாநாட்டில் உபதேசித்தார் மௌலானா முகமதலி.

1927இல் அனைத்துக் கட்சி மாநாடு என்ற பெயரால் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநாட்டின் பாதியிலேயே பலர் சென்றுவிட்டனர். மௌலானா முகமதலி இறுதி வரை மாநாட்டில் இருந்து பணியாற்றினார். காந்தி இதில் கலந்து கொள்ளவில்லை. களைப்படைந்த மௌலானா முகமதலி, “முஸ்லிம்கள் எல்லோரும் ஒரு மனதாக ஒரு முடிவுக்கு வரலாம். அப்பால் அம்முடிவைக் காங்கிரஸில் கூறி நிறைவேற்றிக் கொள்ளலாம். காங்கிரஸ் அம்முடிவை அங்கீகரித்துவிட்டால் அப்புறம் கவலை ஏதுமின்றி தேச விடுதலைக்கான முயற்சிகளில் ஈடுபடலாம்” என்று எண்ணினார்.

20.3.1927இல் டெல்லி வெஸ்டர்ன் ஹோட்டலில் கூட்டம் நடந்தது. காயிதே ஆஜம் முகமதலி ஜின்னாவும் இதில் சேர்ந்து கொண்டார். வேறு பல முன்னணியினரும் சேர்ந்தனர். எல்லோரும் ஒப்புக் கொள்ளத்தக்க வகையில் 14 அம்சக் கோரிக்கைகள் தயாரிக்கப்பட்டன. ஸ்ரீனிவாச அய்யங்காரும் முகம்மது யாகூபும் கலந்து கொண்டனர். மௌலானா முகமதலி திருப்தியுற்றார். (Ashiq majid Batalvi, Iqbal ke Akhari Do sal. Iqbal Academy Karachi,1960 உருது நூல் பக். 217) 22.3.1927 டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் இதன் முழு விவரத்தையும் பார்த்திடலாம். கோரிக்கைகளில் ஒன்றாக இந்து & முஸ்லிம் ஒற்றுமைக்காக 1927இல் பம்பாயில் பொதுக் கூட்டம் ஏற்பாடு ஆயிற்று. சர்தேஜ் இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து ஆற்றிய உரையை 16.7.1927 டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் இந்துக்களின் நிலையை எழுதியது. அதனை Abdul Hamid, Muslim separatism in India, Lahore 1967 நூலின் பக்கம் 194இல் மேற்கோள்காட்டியுள்ளார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.