இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு

0

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு

மௌலானா முகமதலி பேசுகையில் ‘1921 இல் நான் சென்னைக்கு காந்தியடிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருக்கையில் வால்டேர் ஸ்டேஷனில் விசாகப்பட்டினம் கலக்டர் என்னைத் தடுத்து நன்னடத்தை ஜாமீன் கொடுக்குமாறு வாரண்டு பிறப்பித்தார். அவர்தான் நன்டைத்தை ஜாமீன் கொடுக்க வேண்டுமென்று நான் அவரிடம் சொன்னேன் (கூட்டத்தில் பலத்த சிரிப்போலி எழுந்தது) இந்தியரை ஜாலியன் வாலாபாக்கில் படுகொலை செய்து, இரத்தம் தோய்ந்த கையுள்ள நீங்கள் ஜாமீன் கொடுப்பதா? ஒத்துழையாமையையும் அகிம்சையையும் கடைப்பிடித்திருக்கும் நான் ஜாமீன் கொடுப்பதா என்று அவரிடம் நான் கேட்டேன்.

இத்தீர்மானத்திற்கு முன்னர் இந்துக்கள் – முஸ்லிம்கள் தங்களுக்குள் ஜாமீன் கொடுக்குமாறு கேட்டு வந்தோம். இன்றைய தினம் அவ்வழியை விட்டு ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளோம். அதாவது இந்துக்கள் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம்கள் இந்துக்களுக்கும் ஜாமீன் கொடுக்க வெண்டும். இனிமேல் மதவிஷயமாகவும் இந்துகளின் ஊர்வலத்திற்கும் முஸ்லிம்கள் குர்பானியை கொடுப்பதற்கும் காவல்துறையின் உதவியை தேடப்போவதில்லை. இனிமேல் நமது ஊர்வலம் செல்ல எல்லோரையும் விட பெரிய போலீஸ் கமிஷனரை ஏற்படுத்திக் கொண்டு விட்டோம். அதுதான் நமது மனச்சாட்சி, தர்மம், மனோதிடம்.

இன்று நாம் ஒரு அதிசயமான சொற்பொழிவைக் கேட்டோம். அதுதான் மதன்மோஹன் மாளவியா ஜியுடையது. இன்று நான் மதன் மோகன் மாளவியாஜியிடம் என்னை ஒப்புவித்திருக்கிறேன். அவர் என்னைக் காட்டிக் கொடுக்கமாட்டார் என்று நம்பியே அவ்விதம் செய்கிறேன்’ என்று பலத்த, நீடித்த கரகோஷங்களுக்கு இடையே மௌலானா முகமதலி உரையாற்றி அமர்ந்தார்.

சைமன் கமிஷன் தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. எல்லோரும் ஒருங்கே எழுந்து நின்று வந்தே மாதரம் என்ற கோஷத்துடன் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். தலைவர்களும் பிரதிநிதிகளும், ஐந்து நிமிடங்கள் வரையில் வந்தே மாதரம், ‘அல்லாஹ் அக்பர்’ என்று சந்தோஷ ஆரவாரஞ் செய்தனர். காங்கிரஸ் மண்டபம் முழுவதும் ஒரே குதூகலம் நிரம்பியிருந்தது. (இது 1935இல் சென்னை சுதேசமித்திரன் ஆபிசிலிருந்து வெளியான காங்கிரஸ் மகாசபை சரித்திரம் நூல் மூன்றாம் பாகம் 738 முதல் 781 வரையில் உள்ள பகுதிகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது) 1927இல் தமிழகத்தில் நிலவிய நிலைதான் இன்றும் நீடிக்கிறது. அதனைக் குலைக்க நினைப்பவர்கள் ஏமாந்துபோவார்கள் என்பது எதிர்கால வரலாறு தர இருக்கும் பாடமாகும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.