இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: பர்மா பயணம்

0

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: பர்மா பயணம்

“ஹுஸைன் கொல்லப்பட்டார்! எனினும் உண்மையில் அழிந்தது யஜீதுதான். ஹுஸைன் எந்த சத்தியத்துக்காக உயிர் கொடுத்தாரோ, அது அழிந்ததா? இல்லை. இஸ்லாமிய சரித்திரம் அளிக்கும் படிப்பினை என்ன? ஒவ்வொரு கர்பலாவிற்குப் பின் இஸ்லாம் புத்துயிர் பெற்று எழுந்தது என்பதே’’ என்று முழங்கிய மௌலானா முஹமதலி ஜவஹர் 1929 மார்ச்சில் பர்மா (மியான்மர்)விற்குச் சென்றார்கள். அவர்களை முஸ்லிம்கள் பெருமையோடு வரவேற்றனர். இரங்கூன் மஸ்ஜிதில் ‘இஸ்லாத்தின் புத்தமைப்பு’ எனும் தலைப்பில் அவர்கள் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவு அடங்காத உணர்ச்சிக் கொந்தளிப்பின் பிரவாகம்.

மறுநாள் இரங்கூன் டெய்லி நியூஸ் ஏட்டில் அந்த வீரஉரையை வேகம் குறையாமல் பிரசுரித்தவர் அல்லாமா கரீம் கனி. அப்போது அவருக்கு வயது பதினெட்டு. மறுநாள் அவரை அன்போடு அழைத்து அணைத்துக் கொண்டு, போற்றினார் முஹம்மது அலி. தென்னிந்திய முஸ்லிம்களின் தலைவர் வி.மீ. அப்துல் ரஹ்மான் அம்பலம் வீட்டில் மௌலானா முகமதலி தங்கியிருந்த காலம் வரை ஓர் ஊழியரைப் போல தொண்டு செய்தவர் கரீம் கனி. இது என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பேறு’ என்று அவர்கள் சொல்லியுள்ளார்கள் (அல்லாமா கரீம் கனி வரலாறும் கடிதங்களும் மௌலவி, கே. முஹம்மது அப்துஸ் ஸலாம் ஜமாலி, துவரங்குறிச்சி 1992 பக்கம் 26, 27)

தனது மகளின் உடல்நிலை மோசமாக இருந்த காரணத்தினால் பர்மாவில் இருந்து திரும்பினார் மௌலானா முகம்மது அலி. எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்ட மௌலானாவின் மகள் 1929 சூலையில் மறைந்தார். மௌலானாவிற்கு மொத்தம் ஏழு பெண் மக்கள். அவரின் உடல் டில்லியில் அடக்கம் செய்யப்பட்டது. 11.3.1924ல் ஏற்கெனவே ஒரு மகள் மரணமடைந்து அலிகாரில் அடக்கம் செய்யப்பட்டார். அப்போது துருக்கியின் முஸ்தபா கமால் பாட்சா கலீபா பதவியை தடை செய்த வேளை. அதற்காக நீண்ட தந்தியினை தயாரித்துக் கொண்டிருந்த மௌலானா முகமதலி. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.