இந்திய ஜனநாயகம் சந்திக்கும் நெருக்கடிகள்!

0

இந்திய ஜனநாயகம் சந்திக்கும் நெருக்கடிகள்!

ஜனநாயகம் என்பதை சில சடங்குகளாகவே புரிந்துவைத்துள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் காலக்கட்டத்தில் தற்காலிகமாக, பெரும்பாலும் எந்தவொரு அடிப்படை கோட்பாடுகளும் இல்லாமல் உருவாகும் கூட்டணிகள், சுவரொட்டிகள், கோஷங்கள், விளம்பரங்கள்…- இந்த சடங்குகள் மட்டுமே ஜனநாயகமாக கருதப்படுகிறது. ஜனநாயகம் என்றால் என்ன என்பதை தீர்மானிப்பது தேர்தல் மட்டுமா? அல்லது இரண்டு தேர்தல்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளா? உண்மையில் ஜனநாயகத்தை தீர்மானிப்பது தேர்தல் அல்ல.இரண்டு தேர்தல்களுக்கு மத்தியில் நிகழும் சம்பவங்களே தீர்மானிக்கின்றன. ஜனநாயகத்தை ஒரு அரசு, அதன் பிரதிநிதிகள், அதன் தலைவர்கள் எவ்வாறு அணுகுகின்றனர்? எந்த நோக்கத்தில் அவர்கள் ஜனநாயகத்தை பயன்படுத்துகிறார்கள்? அல்லது துஷ்பிரயோகம் செய்கிறார்கள்? ஜனநாயகம் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் எத்தகைய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது? முதலானவை ஜனநாயகத்திற்கான அடிப்படை கேள்விகளாகும்.

ஜனநாயகத்திற்கான அடிப்படை கேள்விகள்

ஜனநாயகம் ஆற்றும் பணி  என்னவெனில் அதுவரை கண்ணுக்கு தெரியாமலிருந்த மக்களை வெளிக்கொணர்வதும், நாம் பார்க்கவியலாத மக்களை நமக்கு காட்டித் தருவதும், அதுவரை நாம் கேட்டிராத மக்களின் குரல்களை கேட்கச் செய்வதும், அதுவரை விலங்குகளைப் போல சமூகத்திலிருந்தும், மையநீரோட்டத்திலிருந்தும் … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.