இந்திய யூதர்கள் & இஸ்ரேல் தொடர்பு

0

இந்திய யூதர்கள் & இஸ்ரேல் தொடர்பு

1940 வரை பம்பாயில் இந்திய யூதர்களை வழி நடத்தியது சூசன்ஸ், மோஸஸ் மற்றும் காதுரீஸ் ஆகிய பாக்தாத் யூதர்களின் குடும்பங்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இந்திய யூதர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசஸ் என்பவர் அந்த காலக்கட்டத்தில் பம்பாய் நகர மேயராக இருந்து வந்தார். இது இலண்டன் மேயர் பதவிக்கு ஒப்பானது. இவர் தான் 1943ம் ஆண்டு போலந்து நாட்டில் பயாலிஸ்டாக் என்ற இடத்தில் பிரபல வழக்கறிஞராகப் பணிபுரிந்த ஹெர்ஷ் சினோவிட்ஸ் என்ற யூதரை இந்தியாவிற்கு வரவழைத்தார்.

அடிமை இந்தியாவில் அப்போதிருந்த ஐரோப்பியர்களின் அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தின் பலனால் இந்தியக் குடியுரிமை பெற்றார் சினோவிட்ஸ். பின்னர் அங்கிருந்த பனீ இஸ்ராயீல் யூத சமூகத்திற்கு தலைமையேற்றார். போலந்தில் இருந்த போதே அவர் யூதர்களின் அரசியல் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கினார். யூதர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

உலகலாவிய யூத சமூதாயத்துடனும் அவர்களின் நிறுவனங்களான உலகளாவிய யூத இயக்கம், உலகளாவிய யூத காங்கிரஸ் மற்றும் பின்னாட்களில் ஃபலஸ்தீனத்தை ஆக்கிரமித்து கள்ளத்தனமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் அரசாங்கத்துடனும் இவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

இவரின் இந்திய வருகைக்குப் பிறகு இந்திய யூதர்களுக்கும் உலகின் பிற பகுதிகளில் இருந்த யூதர்களுக்குமிடையே ஒரு பாலமாக இவர் விளங்கினார்.

பம்பாய் யூத இயக்கம் 1920லேயே உருவாக்கப்பட்டிருந்த போதிலும், இவர் வந்த பின்புதான் அது மும்முரமாக செயல்படத் துவங்கியது. 1940களில் வெறும் 40 பேரை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த அவ்வியக்கம், இவர் வந்த பிறகு 300 பேராக உயர்ந்தது.

1946ல் நடைபெற்ற உலகளாவிய யூத (காங்கிரஸ்) மாநாட்டிற்கு முதல் இந்திய பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் சென்றதும் இவர்தான். அதன் பிறகு இவர் யூதர் நிறுவனத்தின், பிரதிநிதியாகி ஃபலஸ்தீனத்தில் யூதர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் பொறுப்பு வகித்தார்.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.