இந்திய யூதர்கள்

0

இந்திய யூதர்கள்

குஜராத் யூதர்களுக்கு அம்மாநில அரசு சிறுபான்மை அந்தஸ்து வழங்கியது குறித்து கடந்த 2018 டிசம்பர் 16-&31 இதழில் பார்த்தோம்.

இந்தியாவில் யூதர்களின் வருகை, அவர்களின் பரவல் ஆகியவை குறித்து இவ்விதழில் காண்போம்.

2500 வருடங்களுக்கு முன்பாக யூதர்கள் இந்தியாவிற்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதனை உறுதி செய்யும் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை.

அதேபோல கி.பி. 7ம் நூற்றாண்டில் ஏமனிலிருந்து யூத வியாபாரிகள் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரைக்கு வந்ததாகவும், உள்ளூர் இளவரசர் அவர்களை வரவேற்றதாகவும் அங்கே குடியேறிய ஜோசப் ரபான் என்பவருக்கு அந்த இளவரசர் வழங்கிய தாமிரப் பட்டயத்தை யூத சமுதாயம் பாதுகாத்து வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் அந்த தாமிரப் பட்டயத்தை வேறு யாரும் பார்த்ததாகவோ, வெளி உலகிற்கு யூதர்கள் அதனைக் காட்டி உறுதி செய்ததாகவோ எந்தப் பதிவும் இல்லை; அது தொடர்பான சான்றுகளும் காட்டப்படவில்லை.

மார்க்கோ போலோ பயணக்குறிப்பு

“OF THE KINGDOM OF KOVLAM: Upon leaving Maabar and proceeding five hundred miles towards south-west, you arrive at the kingdom Kovlam. It is the residence of many Christians and Jews, who retain their proper language.”

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தைச் சேர்ந்த மார்க்கோ போலோ என்பவர் 13ம் நூற்றாண்டில் கீழைத்தேய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு பயணக் குறிப்பை (Travelogue) எழுதுகிறார். அவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்க்கிறார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.