இந்திய ரயில் நிலையங்களில் கூகுளின் இலவச WIFi

0

இந்தியாவெங்கிலும் உள்ள 100 ரயில் நிலையங்களில் கூகுளின் இலவச wifi இணைப்பு வளங்கப்படம் என்று கூகிள் தலைவர் சுந்தர் பிச்சை 2015 இல் கூறியிருந்தார். கூகிளின் இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக தற்பொழுது 23 ரயில் நிலையங்களில் இலவச wifi இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு மூலம் ஒவ்வொரு மாதமும் 2 மில்லியன் இந்தியர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்திய ரயில்வே துறையுடன் இணைத்து செயல்படுத்தபப்டும் இந்த திட்டம் மேலும் விரிவடையும் என்று நம்பப்படுகிறது. இணையதள பயனாளர்களில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச பயனாளர்களை கொண்ட நாடு இந்தியா. ஆனால் இந்தியாவின் சராசரி இணையதள பயன்பாட்டு வேகமாக 2.8Mbps வேகம் கணக்கிடப்பட்டுள்ளது. கூகிள் தனது இந்த இணைப்பு மூலம் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் 1Gbps வேகம் உள்ள இணையதள இணைப்பை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த இனையதள இணைப்பை பொழுபோக்கிற்காக மக்கள் பயன்படுத்தி வந்தாலும் பலர் கல்வி குறித்த தேடல்களையும் இந்த இணைப்பில் செய்து வருகிறார்கள் என்று கூகிள் தெரிவித்துள்ளது. நகரங்களைக் காட்டிலும் இந்த wifi அதிகளவில் கிராமங்களில் பயன்படுத்தப்படுகிறது என்று கூகிள் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த இணைப்புகள் ரயில்டெல் நிறுவனத்தில் 45000கிலோமீட்டர் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டாலும் ரயில்டெல் குறிப்பிட்ட இலவச சேவைக்கு பின் கட்டணங்களை வசூலிக்கக் கூடும் என்று கூகிள் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இணையதள இணைப்பு வழங்குவதற்கான கூகிளின் திட்டம் ரயில் நிலையங்களோடு முற்று பெற்றுவிடவில்லை. ப்ராஜெக்ட் லூன் என்ற வானில் உயர பறக்கும் பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வழங்கும் திட்டத்தையும் கூகிள் வைத்துள்ளது. இந்த திட்டத்திற்கு அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு தற்போது தடை விததிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.