இந்திய ராணுவம் காஷ்மீரி பெண்களை கற்பழிக்கிறது: கன்னையா குமார்

0

ஜவஹர்லால் நேரு மாணவ அமைப்பின் தலைவர் கன்னையா குமார், இந்திய ராணுவம் காஷ்மீரி பெண்களை கற்பழிக்கிறது என்று கூறியுள்ளார். “நீங்கள் எவ்வளவு முயற்சி செய்து எங்களை தடுக்க பார்த்தாலும் பரவாயில்லை, நாங்கள் மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் எழுப்புவோம். எங்களது குரல்களை AFSPA விற்கு எதிராக எழுப்புவோம். ராணுவ வீரர்கள் மீது எங்களுக்கு மரியாதை இருந்தாலும், காஷ்மீரில் பெண்கள் பாதுகாப்பு படையினரால் கற்பழிக்கப்படுவது பற்றி பேசுவோம்” என்று சர்வதேச மகளிர் தின ஊர்வலத்தில் கூறியுள்ளார்.

“ருவாண்டாவில் போரின் போது 1000 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். ஆபிரிக்காவில் இன மோதல்களில் எப்பொழுதெல்லாம் ராணுவம் எதிர் குழுவினரை தாக்குகிறதோ அப்பொழுதெல்லாம் அவர்களின் பெண்களை கற்பளிகின்றனர். குஜராத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். பெண்கள் கொலை மட்டும் செய்யப்படவில்லை, அவர்கள் கற்பழித்து கொல்லப்பட்டனர்.” என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சை அடுத்து பாரதிய ஜனதா யுவ மோட்சா அமைப்பினர் வசந்த் விஹார் காவல் நிலையத்தில் கன்னையாவின் இந்த பேச்சு தேச விரோத பேச்சு என்றும் அவர் தனது பிணை நிபந்தனைகளை மீறிவிட்டார் எனவும் கூறி புகாரளித்துள்ளது.

BJYM பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பினர் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக பேராசிரியார் ஒருவர் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என்று கூறியதாகவும், காஷ்மீர் விடுதலை ஆதரவு கோஷங்களை எழுப்பியதாகவும் கூறி அவர் மேலும் புகாரளித்துள்ளனர்.

இந்த புகாரில் “JNU பேராசிரியர் நிவேதிதா மேனன் இந்திய ராணுவம் குறித்து விஷத்தை பரப்பி வருவதாகவும். இந்தியா காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளதாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப் பட்டுள்ளதாகவும் கூறுகிறார்” என்று கூறியுள்ளனர்.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், புகார்கள் எங்களிடம் வந்துள்ளன என்றும் ஆனால் இன்னும் முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

Comments are closed.