இந்திய விமானப் படையின் விசாரணையை வெளியிட தடையா?

0

இந்திய விமானப்படைக்கு சொந்தமான IAF Mi-17V5 ஹெலிகாப்டர் ஒன்று, இந்திய ராணுவத்தின் ஏவுகணை பேட்டரியாலேயே சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த விசாரணை முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைக்குமாறு, இந்திய விமானப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; IAF Mi-17V5 என்ற ஹெலிகாப்டர், பாகிஸ்தானைச் சேர்ந்தது என்று தவறுதலாக கணிக்கப்பட்டு, ஸ்ரீநகர் விமானதள பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய ஏவுகணை பேட்டரியால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த எதிர்பாராத விபத்தில், 6 விமானப்படை வீரர்களும், ஒரு சிவிலியனும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த தேதி பிப்ரவரி 27.

ஆனால், இதுகுறித்த விசாரணை முடிவுகளை வெளியிடக்கூடாது என விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி வழங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும், பணியில் தவறு செய்யும் நபர்களுக்கு தண்டனை வழங்கி, ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும், விமானப்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Comments are closed.