இந்திய விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்தை ரத்து செய்து விடுவோம்: ரியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு

0

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களை உற்சாகப் படுத்தவும் அங்கு நம் விளையாட்டு வீரர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் ரியோ டி ஜெனிரோ வில் உள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல்.

ஆனால் அமைச்சர் விஜய் கோயல் உடன் இருப்பவர்கள் ஏற்படுத்திய சச்சரவுகளால் ரியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்தை ரத்து செய்து விடுவதாக எச்சரித்துள்ளது. மேலும் அமைச்சருடன் வளம் வரும் அங்கீகாரம் பெறாத நபர்கள் மிக மோசமாக நடந்து கொள்வதால் தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல முறை இது குறித்து முறையிட்டும் அவர்களின் நடத்தையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அங்கீகாரம் பெறாத நபர்கள் நுழையக் கூடாத இடங்களிலும் அவர்கள் நுழைந்து செல்கிறார்கள் என்றும் மீறி பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தடுத்தால் அவர்களிடம் கோபப்பட்டு கூச்சலிடுவதாகவும் சில நேரங்களில் பாதுகாப்பு அதிகாரிகளை தள்ளிவிட்டு உள்ள செல்வதாகவும் ரியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு தனது கடித்தத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், இது போன்ற செயல்கள் பொறுத்துக் கொள்ள முடியாதது என்றும், பலமுறை எச்சரிக்கை விடுத்தப் பின்னும் மீண்டும் இது போன்ற செயல்கள் நிறுத்தப்படவில்லை என்றும் இனியும் இது தொடர்ந்தால் உங்கள் விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யவேண்டி இருக்கும் என்றும் ஒலிம்பிக் விளையாட்டில் அவரது சலுகைகள் திரும்பப் பெறப்படும் என்றும் தங்கள் கடிதத்தில் ஒலிம்பிக் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

Comments are closed.