இந்துக்களுக்கு எதிராக பேசிய கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம்: மன்னார்குடி சாமியார்

0

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என பேசினார். இதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பக மன்னார் சாமியார்  ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துக்கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என்கிறார். அவரது கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் இதுபோன்று சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பேசினால் தமிழகத்தில் நடமாட விடமாட்டோம். கமல்ஹாசன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். அவர் மட்டுமின்றி அவரது குடும்பமே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டது. அதனால்தான் அவர் தொடர்ச்சியாக இந்துக்களுக்கு எதிராக பேசி வருகிறார்.

கமல்ஹாசன் மட்டுமல்ல, இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம். கமல்ஹாசன் கட்சிக்கு தடை விதிக்க கோரி அகில இந்திய துறவியர் பேரவை சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்போம்.” என தெரிவித்தார்.

Leave A Reply