இந்துக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது இஸ்லாத்திற்கு விரோதமானது- இம்ரான் கான்

0

இந்துக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது இஸ்லாம் மார்க்கத்திற்கு விரோதமானது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நேற்று தேசிய சிறுபான்மையினர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான நிகழ்ச்சி இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: 

”பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் மதவழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படும். தங்கள் மதவிழாக்களை, பண்டிகைகளை எந்தவிதமான இடையூறும் இன்றி கொண்டாடி மகிழவும் அவர்களுக்குள்ள உரிமை பாதுகாக்கப்படும், 

இறைத்தூதர் முகமது நபி ஆட்சியில்அனவருக்கும் மத சுதந்திரம் வழங்கப்பட்டது. அவர்களின் மதவழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட்டன. ஒரு இந்துப் பெண்ணைத் திருமணம் செய்து, முஸ்லிம் மதத்துக்கு எப்படி நாம் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முடியும். முஸ்லிம் வரலாற்றில் இதுபோன்ற கட்டாய மதமாற்றத்துக்கு இடமில்லை.  இந்தச் செயல் முஸ்லிம் மதத்துக்கு விரோதமானது”. இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்.

Comments are closed.