இந்துத்துவத்தை அனுமதிக்க முடியாது! எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் பேட்டி

0

இந்துத்துவத்தை அனுமதிக்க முடியாது! எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் பேட்டி

திருச்சியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழுவில் அடுத்த மூன்றாண்டுகளுக்கான தலைவராக திருநெல்வேலியை சேர்ந்த முகம்மது முபாரக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழத்தின் அரசியல் சூழல் மற்றும் கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து புதிய விடியலுக்கு அவர் வழங்கிய பேட்டி…

தேசிய கட்சியின் மாநில தலைவராக மிக குறைந்த வயதில் தேர்வு செய்யப்பட்டவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கக் கூடும். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உரிமைகளுக்காகப் போராடும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவராக இளம் வயதில் பொறுப்பேற்றுக் கொண்ட உங்களுக்கு புதிய விடியல் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியின் தொடக்கம் முதலே பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றுள்ள நீங்கள், தலைமைப் பதவிக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா?

எஸ்.டி.பி.ஐ. கட்சி கடந்த 2009 ஜூன் 21 முதல் ‘பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை’ எனும் முழக்கத்தோடு இந்த நாட்டுக்காக அர்ப்பணம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் சந்தித்த அனைத்து பிரச்சனைகளிலும் மக்களின் சார்பாக அநீதிக்கெதிராக நியாயத்திற்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ. களம் கண்டதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையிலே எஸ்.டி.பி.ஐ. கட்சியில் எனது தலைமையில் 21 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழு பொறுப்பேற்றுள்ளது. மிகவும் சவாலான காலகட்டத்திலே நாங்களெல்லாம் பொறுப்பேற்றுள்ளோம்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியை பொறுத்தவரை கட்சியின் கொள்கைகளை புரிந்துகொண்டவர்கள் பொறுப்பை எதிர்பார்க்க மாட்டார்கள். காரணம் அதன் சுமை என்னவென்பது அவர்களுக்குத் தெரியும். எனவே நான் எதிர்பார்க்கவில்லை. இங்கு பதவிப் போட்டி என்பதும் கிடையாது. அதே நேரம் தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அந்த பொறுப்பை நிறைவேற்ற தயாராவோம்.

திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்த தமிழகத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடங்கி ஒரு தசாப்தமேயான நிலையில், தலைவராக எத்தகைய சவால்கள் உங்கள் முன் இருப்பதாக கருதுகிறீர்கள்?

திராவிடக் கட்சிகள் கடந்த அறுபது அல்லது எழுபது ஆண்டுகளாக தமிழக மக்களை வழி நடத்தின அல்லது ஆட்சி செய்துள்ளன. தற்போது தமிழகத்தில் திராவிடத்தை வீழ்த்துவதற்கான வேலைகள் நடக்கின்றன. திராவிடத்தை நிலைநாட்ட முனைபவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். இந்த நாட்டையே பீடித்துள்ள இந்துத்துவ பாசிசம் தமிழகத்தில் திராவிடத்தை அழித்து அந்த இடத்திலே காவிக்கொடி பறக்க வேண்டும் என்று நினைக்கிறது. இதை எஸ்.டி.பி.ஐ. கட்சி மிகப்பெரிய சவாலாகவே பார்க்கிறது. பெரியாருடைய பூமியிலே, அண்ணாவுடைய பூமியிலே, திராவிட தத்துவம், சமத்துவம் மேலோங்குவதும் வளர்வதும் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார சக்திகளின் வீழ்ச்சியாகவே இருக்கும். எனவே ஒருமித்த கருத்துடைய, மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைத்து ஓரணியில் பயணிப்பது அவசியம். அதை நோக்கியே எங்கள் பயணம் தொடர்ந்து அமையும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.