இந்துத்துவாவிடமிருந்து பெண்களை பாதுகாப்போம்!

0

இந்துத்துவாவிடமிருந்து பெண்களை பாதுகாப்போம்!

ஜம்மு கஷ்மீரின் கட்டுவா என்ற பகுதியின் பகர்வால் நாடோடி சமூகத்தை சேர்ந்த ஆசிஃபா என்ற எட்டு வயது சிறுமி கடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டு இறுதியாக படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த மாபாதக செயலை கண்டித்து மக்கள் வீதிகளில் போராடி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச பத்திரிகைகளும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.

ஜனவரி 10ஆம் தேதி காணாமல் போன ஆசிஃபா, ஜனவரி 17 அன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டாள். அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதையும் அதில் சம்பந்தப்பட்ட கயவர்களை இந்துத்துவ அமைப்பினர் பாதுகாப்பதையும் மார்ச் 1-&15 புதிய விடியல் இதழில் நாம் பதிவு செய்திருந்தோம். தற்போது இந்த வழக்கில் குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததை தொடர்ந்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளை அறிந்த மக்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர்.

சமீப ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வகுப்புவாத பிரச்சாரத்தின் விளைவாக, தங்களின் விளைச்சல்களை முஸ்லிம்களான பகர்வால் இன மக்களுக்கு கொடுப்பதற்கு இங்குள்ள இந்துக்கள் மறுத்து வருகின்றனர். அத்துடன் இருப்பிடங்களை விட்டும் பகர்வாலாகளை விரட்டுவதற்கான மிரட்டல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிஃபாவின் மரணத்தை நாம் இவற்றுடனும் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது.

கொடுமையின் உச்சகட்டமாக அச்சிறுமியை அவர்கள் அடைத்து வைத்த இடம் ஒரு கோயில்! அனைத்து இடங்களிலும் மகளை தேடியவர்கள் கோயிலில் வைத்திருக்க வாய்ப்பே இல்லை என்பதால் அங்கு தேடாமல் விட்டு விட்டோம் என்று தற்போது ஆசிஃபாவின் பெற்றோர் கண்ணீருடன் கூறுகின்றனர்.

குதிரைகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக ஜனவரி 10 அன்று அழைத்துச் சென்ற மகள் திரும்ப வராததை அறிந்து பதற்றம் அடைந்து காவல்துறையில் புகார் அளித்தார் தந்தை முகம்மது யூசுப். முதலில் ஒரு மைனர் சிறுவன் மீது மட்டும் குற்றத்தை சுமத்தி உண்மைகளை மறைப்பதற்கு காவல்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். வழக்கு குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்ட பின்தான் உண்மை வெளியே வந்தது. இந்த கொடூர நிகழ்வுகளில் காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதையும் இந்த விசாரணை வெளியே கொண்டு வந்தது. எட்டு வயது சிறுமியை கடத்திச் சென்று அவளுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து மயக்க நிலையில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். கொடுமையின் உச்சகட்டமாக அச்சிறுமியை அவர்கள் அடைத்து வைத்த இடம் ஒரு கோயில்! அனைத்து இடங்களிலும் மகளை தேடியவர்கள் கோயிலில் வைத்திருக்க வாய்ப்பே இல்லை என்பதால் அங்கு தேடாமல் விட்டு விட்டோம் என்று தற்போது ஆசிஃபாவின் பெற்றோர் கண்ணீருடன் கூறுகின்றனர்.

…முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.