இந்துத்துவாவின் கும்பல் கொலையை தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்!

0

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகியது. பல்வேறு மாநிலங்களில் இந்துத்துவா வெறியர்கள், பசுப் குண்டர்கள், ஜெய் ஸ்ரீராம் என கூற சொல்லி நடத்தும் தாக்குதலை பாஜக அரசு ஊக்குவித்து வருகிறது.

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மையினர் மீது நடக்கும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் “மதத்தின் பேரில் கும்பல்கள் செய்யும் கொலை என்பது ஒரு கொடிய நோய். இது நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்த கும்பல் கொலையால் பலர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் உள்பட சமுதாயத்தின் அனைத்து மக்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு மற்றும் சில மாநில அரசுகளின் இந்த அலட்சியப் போக்கு காரணமாக கும்பல் கொலைகள் பெருகி வருகின்றன. மேலும், கும்பல் கொலையை தடுக்க நாடு தழுவிய அளவிலான புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்” என மயாவதி வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.