“இந்துத்துவா என்பது தேசியவாதம்” நிதின் கட்கரி கருத்து

0

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி “நான் பிரதமர் வேட்பாளர் இல்லை என்பதை ஏற்கனவே கூறிவிட்டேன். 2014 பொதுத் தேர்தலை விட இம்முறை பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமராவது உறுதி. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். காங்கிரஸ் 50 ஆண்டுகளில் செய்யாததை பாஜக, 5 ஆண்டுகளில் செய்துவிட்டது.

இந்துத்துவா என்பது இந்து மதத்தை குறிப்பது அல்ல, நாம் எப்படி வாழ வேண்டும் என்று கூறுவது. எங்களை பொறுத்தவரை இந்துத்துவா என்பது தேசியவாதம்” என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.

Comments are closed.