இந்துத்துவா வெறியர்களால் தப்ரேஸ் அன்சாரி கொலை செய்யப்பட்ட வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

0

கடந்த மாதம் ஜார்கண்ட் மாநிலத்தில் தப்ரேஸ் அன்சாரி என்ற இஸ்லாமிய இளைஞர் மீது இந்துத்துவ வெறியகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். மேலும் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் ஜெய் ஹனுமான் போன்ற முழக்கங்களை கூறி சொல்லியும் வற்புறுத்தியுள்ளனர். ஒரு இரவு முழுவதும் அவரை இரக்கமில்லாமல் கொடூரமாக தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலையிகல் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டதுடன், 2 போலீசாரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சூழலில் பங்கஜ் யாதவ் என்பவர் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தப்ரேஸ் அன்சாரி மரணம் தொடர்பான வழக்கில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை வரும் 17ஆம் தேதி அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகளையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments are closed.