இந்து தீவரவாதம் கருத்து கூறிய கமலஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும்: இந்து மகாசபை

0

வலது சாரி இந்து அமைப்புக்கள் ஆரோக்கியமான விவாதங்களில் இருந்து மாறிச்சென்று தங்களது கருத்தை பிரச்சாரம் செய்ய தீவிரவாத செயல்களில் இறங்கிவிட்டது என்று கமல் பத்திரிக்கை ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார். இவ்வாறு அவர் கூறியதற்காக அவரையும் அவரை போன்ற கருத்து உள்ளவர்களையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அகில பாரதிய இந்து மகாசபை கருத்து கூறியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தேசிய துணை தலைவர் அசோக் ஷர்மா கருத்து தெரிவிக்கையில், “கமலஹாசன் மற்றும் அவரைப் போன்றவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வைகையில் அவர்களை சுட்டுக் கொலை செய்ய வேண்டும் அல்லது தூக்கில் போட வேண்டும். இந்து மத நம்பிக்கையை பின்பற்றுபர்வகள் குறித்து மோசமான கருத்து கூறும் எவருக்கும் இந்த புண்ணிய பூமியில் வாழ உரிமை இல்லை, மேலும் அவர்களின் கருத்துக்களுக்காக அவர்களை சுட்டுக் கொலை செய்ய வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார் .

இந்த அமைப்பின் மற்றொரு தலைவரான அபிஷேக் அகர்வால், “கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கமலஹாசனின் திரைப்படங்களை பார்ப்பதில்லை என்று உறுதிபூண்டுள்ளனர். இன்னும் சொல்லப்போனால் அனைத்து இந்தியர்களும் இந்த முடிவை எடுக்க வேண்டும். இந்து மக்களையும் அவர்களது மதத்தினையும் அவமதிக்கும் நபர்களை மன்னிக்கக் கூடாது.” என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் பத்திரிக்கை ஒன்றில் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ முனையும் இந்துத்வ சக்திகள் குறித்து தனது கருத்தை பதிவு செய்கையில் கமல் இந்த கருத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.