இனப்படுகொலைக்கு சாமரம் வீசும் சமாதான புறா!

0

இனப்படுகொலைக்கு சாமரம் வீசும் சமாதான புறா!

1991இல் சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றவர் மியான்மரின் ஆங் சான் சூ கி. அந்நாட்டின் இராணுவ ஆட்சியை எதிர்த்து போராடிய இவர் பல்லாண்டுகள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜனநாயகத்தின் முகமாகவே பார்க்கப்பட்ட ஆங் சான் சூ கி-க்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது உலகம் அவரை ஆரத் தழுவியது. ஆனால் 25 வருடங்கள் கழித்து அவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை திரும்பப் பெற வேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் எழுந்தது. ரோகிங்கியா முஸ்லிம்களின் இனப்படுகொலை விவகாரத்தில் இனப்படுகொலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் எடுத்ததே இந்த கோரிக்கைக்கான காரணம்.

2019 டிசம்பர் 10 முதல் 12 வரை நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் இராணுவத்திற்கு எதிரான இனப்படுகொலை குறித்த விசாரணை நடைபெற்றது. நாட்டின் இராணுவத்தை பாதுகாப்பதற்காக இனப்படுகொலையை மறுத்து வாதாடச் சென்றவர் பிரதமர் பதவியை நடைமுறையில் அனுபவித்து வரும் ஆங் சான் சூ கி. ஜனநாயகம், போராட்டம் எல்லாம் மியான்மரில் உள்ள பௌத்தர்கள் இடையே நடைபெறும் சிறு சண்டைகளே, முஸ்லிம்கள் என்று வந்துவிட்டால் அவர்களை அடக்குவதிலும் அழிப்பதிலும் இராணுவத்திற்கும் தனக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார் ஆங் சான். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.