இன்னும் 400 வருடங்களுக்கு தாஜ்மஹாலை பாதுகாக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

0

இன்னும் 400 ஆண்டுகளுக்கு தாஜ்மஹாலுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அதனை பாதுகாக்க ஒரு விரிவான திட்டத்தை உத்திர பிரதேச அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உத்திர பிரதேச அரசு தாக்கல் செய்ய தற்காலிக அறிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீதிபதி மதன் B. லோகுர் மற்றும் நீதிபதி தீபக் குப்தா அடங்கிய பென்ச், உத்திர பிரதேச அரசிற்காக ஆஜரான கூடுதல் சொலிட்டர் ஜெனெரல் துஷார் மேத்தாவிடம், அதிகாரிகள் உறுதியாக செயல்பட்டு தாஜ்மஹாலை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து தரப்பினரையும் உட்படுத்தி செயல்பாடாமல் புதிய இந்தியா குறித்தோ அல்லது அரசின் 2022 திட்டம் குறித்தோ கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று கூறியுள்ளது.

இது குறித்து நீதிபதி லோகுர் கூறுகையில், “அவசரப் படாதீர்கள். இன்னும் நானூறு வருடங்கள் வரை நிலைத்திருக்க வேண்டிய ஒன்றை குறித்து நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். முன்னதாக நம்மிடம் ஐந்து வருடங்களுக்காக திட்டங்கள் மற்றும் இலக்குகள் இருந்தது. ஆனால் நாம் அவசரப்படக்கூடாது.” என்று கூறியுள்ளார்.

“இதனை நாம் நடைமுறை வழியில் பார்க்க வேண்டும். இதனை நாம் தொலைநோக்கு பார்வையுடன் பார்க்கக் வேண்டும். உங்கள் கைகளை சட்டைப் பைகளில் வைத்துக்கொண்டு புதிய இந்தியாவை நீங்கள் அடைய முடியாது. இதனை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும்.” என்று நீதிபதி லோகுர் கூறினார்.

தாஜ்மஹாலை பாதுகாக்க உத்திர பிரதேச அரசின் தற்காலிக நடவடிக்கைகள் குறித்து தங்களது அதிருப்தியை தெரிவித்தபின் நீதிபதிகள் இந்த கருத்தை கூறியுள்ளனர். சமீபத்தில் உத்திர பிரதேச அரசு தாஜ்மஹாலை சுற்றுலா தளங்களின் பட்டியலில் இருந்து நீக்கியது. மேலும் பல பாஜக தலைவர்கள் தாஜ்மஹாலை முகலாயர்களால் கட்டப்பட்டது என்று கூறி அதன் இருப்பை கேள்விக்குரியாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஆர்வலர் M.C.மேதா என்பவர் தாஜ்மஹாலுக்கு 1 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாக பல அடுக்கு கார்பார்கின் கட்டுமானம் ஒன்று குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதன் விசாரணையின் போது நீதிமன்றம் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த கட்டுமானத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

தாஜ்மஹால் பாதுகாப்பு குறித்து திட்டம் மற்றும் கட்டடக்கலை பள்ளியின் உதவி கொண்டு உத்திர பிரதேச அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என்று துஷார் மேத்தா தெரிவிக்கையில், கலாச்சாரம், வரலாறு மற்றும் தொல்லியல் துறை நிபுணர்களை ஈடுபடுத்தி இதனை செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை என்றும் இதில் அவசரம் எதுவும் இல்லை என்றும் இதற்கு அதிகாரத்துவ பதிகள் வேண்டாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவிக்கையில், “இது மூடிய அறைக்குள் நடக்க வேண்டிய விஷயமல்ல.  இந்த நினைவுச்சின்னம் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு தலைமுறைக்கு மட்டும் அல்ல இனி வர இருக்கின்ற 300, 400 வருடங்களுக்கு.” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Comments are closed.