இப்படி ஒரு அரசுக்கு ஊதுகுழலாக இருக்க நாங்கள் விரும்பவில்லை: 3 ABVP தலைவர்கள்

0

ஜவஹர்லால் நேரு பல்கலைகழத்தின் ABVP அமைப்பை சேர்ந்த மூன்று தலைவர்கள் மத்திய அரசு JNU மாணவ பிரச்னையை கையாண்டதை அடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தங்களது இந்த முடிவை குறித்து கருத்து தெரிவித்த அவர்கள் “ஓவ்வொரு நாள் காலையிலும் இந்திய கொடியுடன் ஒரு கும்பல் JNU மாணவர்களை அடிப்பதை நாங்கள் பார்கிறோம். இது தேசப்பற்று இல்லை. சமூக விரோத செயல்” என்று கூறியுள்ளனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக ABVP துணை செயலாளர் பிரதீப், SSS ABVP பிரிவு தலைவர் ராகுல் யாதவ் மற்றும் SSS ABVP செயலாளர் அன்கித் ஹன்ஸ் ஆகிய இவர்கள் தான் தங்கள் பதவியை ராஜினாமா செய்தவர்கள். இவர்கள் தங்களுடைய ராஜினாமா கடிதத்தில் JNU வில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளையும், ரோஹித் வெமுலா தற்கொலை மற்றும் மனுஸ்மிர்த்தி குறித்த வேறுபாடுகளாலும் தாங்கள் ராஜினாமா செய்வதாக கூறியுள்ளனர்.

“தேச விரோத கோஷங்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக வளாகத்திற்குள் எழுப்பப்பட்டது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது என்றும் அதை செய்தவர்கள் யாரானாலும் அவர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் இந்த பிரச்னையை அரசு கையாண்ட விதம், ஆசிரியர்களை ஒடுக்கியது, நீதிமன்ற வளாகத்தில் கன்ஹையா குமாரை தாக்கியதும் நியாயமற்ற செயல்” என்று கூறியுள்ளனர்.

#SHUTDOWNJNU என்ற ஹாஷ்டாக் தற்பொழுது பரவலாகி வரும் வேலையில் நியாயமாக #SHUTDOWNZEENEWS தான் பரவலாகி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். யாரோ ஒரு சில மாணவர்கள் செய்த தவரை பொதுமைப் படுத்தி JNU விற்கு எதிரான பிரச்சாரத்தை துவங்கியதே அந்த தொலைகாட்சி சானல் தான் என்று கூறியுள்ளனர். மேலும் JNU நாட்டின் சிறந்த முன்னேற்றப்பாதையில் செல்லக்கூடிய ஜனநாயக கல்வி நிறுவனம் என்றும் இங்கு சமுதாயத்தின் குறைவான மற்றும் நிறைவான பொருளாதார தளத்தில் உள்ள மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து சமத்துவம் நிலவும் கல்வி நிறுவனம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இப்போது கட்சி வேறுபாடுகளை தாண்டி நாம் அனைவரும் ஒன்றிணைந்து JNU வின் பெயரை பாதுகாக்க வேண்டிய நேரம், JNU வில் 80% மாணவர்கள் எந்த அரசியல் பிரிவையும் சாராதவர்கள். அதனால் JNU காலாச்சாரத்தை பாதுகாக்க நாம் ஒன்றிணைவோம் என்று கூறியுள்ளனர்.

அவர்களின் கடிதம் ஆங்கிலத்தில் இதோ:

We, Pradeep, Joint Secretary, ABVP JNU UNIT, Rahul Yadav, President SSS ABVP UNIT and Ankit Hans, Secretary SSS ABVP UNIT resigning from ABVP and disassociating ourselves from any further activity of ABVP as per our difference of opinion due to the following reasons:

1. Current JNU incident.
2. Long standing difference of opinion with party on MANUSMIRITI and Rohith Vermula incident.

Anti-national slogans on Feb. 9 in university campus were very unfortunate and heart breaking. Whosoever responsible for that act must be punished as per the law but the way NDA government tackling the whole issue, the oppression on Professors, repeated lawyer attacks on Media and Kanhaiya kumar in court premises is unjustifiable and we think there is a difference between interrogation and crushing ideology and branding entire left as Anti-national.

People are circulating ‪#‎SHUTDOWNJNU but I think they must circulate ‪#‎SHUTDOWNZEENEWS which has demeaned this world class institution, this biased ZEE news media generalize and related the act done by few people to the whole student community of JNU. JNU is considered as one of the progressive and democratic institution where we can see intermingling of people from lower to upper income strata of the society, notion of equality.

We can’t be mouthpiece of such a govt. which has unleashed oppression on student community, legislature like O P Sharma, govt. which has legitimized the action of right wing fascist forces either in Patiala house court or in front of JNU north gate. Every day we see people assemble at front gate with Indian Flag to beat JNU student, well this is hooliganism not nationalism, you can’t do anything in the name of nation, there is a difference between nationalism and hooliganism.

Anti-India slogans can’t be tolerated in campus or any part of country, JNUSU& some left organization are saying that nothing has happened in the campus but here we want to stress that veiled persons in the event organized by former DSU persons shouted slogans BHARAT TERE TUKADDE HONGE of which there is concrete evidence in videos, so we demand any person responsible for the slogans should be punished as per the law, and in this whole process we also condemn media trial which has culminated in Anti-JNU sentiments throughout the country. Today we all must stand together to save JNU which has given us identity, we need to come across party lines to save reputation of this institution, to save future of JNUites as more than 80% of students don’t belong to any political party so let’s unite to save this JNU culture.

VANDE MATRAM
JAI BHIM
JAI BHARAT

மேலும் படிக்க: JNU, ABVP

Comments are closed.