Me Too இயக்கமும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும்!

0

Me Too இயக்கமும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும்!

பெண்களின் அடையாளத்தையும், கண்ணியத்தையும் கடித்துத் குதறும் காலத்திற்கு ஓய்வளிக்குமா மீ டூ இயக்கம்? பெண்களின் வெளிப்படையான போராட்டம் பலருடைய உண்மையான முகத்தை வெளிக்கொணர்கிறது. 2006ல் அமெரிக்க பத்திரிகையாளர் தரானா பர்கே 13 வயது சிறுமியின் பாலியல் புகாரை கேட்டு விட்டு பதில் கூற இயலாமல் ‘மீ டூ’ என்று கூறி முடித்தார். ஹாலிவுட்டில் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு பரவலானபோது ‘மீ டூ’ (நானும் கூட) என்று கூறி 2017 அக்டோபர் 15 ஆம் தேதி அலிசா மிலனோ முதன்முறையாக ட்விட்டரில் ஹாஷ்டேக்கை பயன்படுத்தி தான் அனுபவித்த பாலியல் வன்முறையை வெளியுலகிற்கு தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து ஒரே இரவில் இரண்டு லட்சம் பேர் தாங்களும் இதுபோல பாலியல் வன்முறைக்கு இரையானதை சுட்டிக்காட்டும் ஹாஷ்டேக்குகளை பதிவு செய்தனர். ஆனால், ஒரு நாள் முடிவுற்றபோது இந்த எண்ணிக்கை ஐந்து லட்சமாக அதிகரித்தது. ஃபேஸ்புக்கில் 24 மணிநேரத்தில் 47 லட்சம் பேர் இந்த மீ டூ இயக்கத்தில் இணைந்தனர்.ஒரு வருடத்திற்குள் 1.2 கோடி பேர் ஹாஷ்டேக்குகளுடன் சமூக வலை தள பரப்புரையில் பங்கேற்று தாங்கள் அனுபவித்த வன்முறைகளை பகிர்ந்தனர்.

திரைப்படங்களிலும், அரசியலிலும் பிரபலங்களான ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். ஆனால், பயமும், சந்திக்க நேரும் இழிச்சொல்லும் அவர்களை உண்மைகளை வெளிக்கொணர்வதை விட்டும் தடுத்தன. ஆனால், இனியும் மௌனமாக இருந்தால் வரும் தலைமுறையும் இத்தகைய பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் என்பதை புரிந்துகொண்டவர்கள் மீ டு இயக்கம் மூலம் சமூகத்தின் பல்வேறு துறைகளில் வன்முறையுடன் கூடிய ஆணாதிக்கத்திற்கு முடிவு கட்ட முயற்சிக்கின்றார்கள். உலக வரைபடத்தில் குறைந்த காலத்தில் ரஷ்யா, சீனா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளை தவிர இதர நாடுகளிலெல்லாம் மீ டு இயக்கம் பரவலாகியுள்ளது.

காந்தியின் 150-வது நினைவு தினத்தை கொண்டாட ஆப்பிரிக்காவிற்கு புறப்பட்ட வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக ஒன்பது பெண்கள் ஹாஷ்டேக்குகளுடன் களமிறங்கினர். அதேவேளையில் நானா படேகருக்கு எதிராக நடிகை தனுஸ்ரீ தத்தா, பூஜா பட், கங்கணா ராவத் ஆகியோர் மீ டூ இயக்கத்தில் இணைந்தனர். எழுத்தாளர் சேதன் பகத் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. தமிழ் திரைப்படத்துறையில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை எழுப்பினார். மலையாள திரைப்படத்துறையில் நடிகர் முகேஷ் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.