இயல்பாக இருக்கிறதா கஷ்மீர்?

0

இயல்பாக இருக்கிறதா கஷ்மீர்?

ஒரு மணிநேரம் இன்டர்நெட் இல்லாமல் வாழ முடியுமா?’’ என்று கேட்டால் ”நோ சான்ஸ்” என்று ஸ்மார்ட்போனில் இருந்து முகத்தை திருப்பாமல் பதில் சொல்வோம். உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுடன் இன்று இணைய மற்றும் தொலைபேசி சேவைகளும் மக்களின் அன்றாட தேவைகளாக மாறிவிட்டன. ஆனால் தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் இல்லாமல் ஆகஸ்ட் 4 முதல் கஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்துகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவுகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அந்த அந்தஸ்துகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. அத்துடன் மாநிலத்தையும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம். ஜம்மு கஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு புதிய யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31 அன்று இந்திய ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டு புதிய இந்திய வரைபடத்தையும் மத்திய அரசாங்கம் வெளியிட்டது. ‘கிரீடத்தை இந்தியா இழந்துவிட்டது’ என்று தி டெலிகிராப் நாளிதழ் இதனை வர்ணித்திருந்தது. ஜம்மு கஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திர மர்மூ குஜராத்தை சேர்ந்தவர். 2002இல் குஜராத்தின் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட போது மாநிலத்தின் முதன்மை செயலாளராக இருந்தவர் இவர்தான். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.