இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு வாக்குரிமை ரத்து: மத்திய அமைச்சர் கோரிக்கை

0

இந்திய நாட்டில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் வைத்திருக்கும் தம்பதிகளின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “நாட்டின் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. கடந்த 1947ஆம் ஆண்டிற்கு 2019ஆம் ஆண்டிற்கும் இடையிலுள்ள காலத்தில், நாட்டின் மக்கள்தொகை 366 மடங்கு அதிகரித்துள்ளது.

மக்கள்தொகை அதிகரித்து வருவதால் நாட்டில் பல சிக்கல்கள் உருவாகின்றனது. ஆகையால் மக்கள்தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை அனைத்து கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும். இந்த சட்டத்திலிருந்து எந்த மதத்தினர் மற்றும் பிரிவினருக்கும் விதிவிலக்கு அளிக்கக்கூடாது. சிலர், தங்கள் மதக்கொள்கை குடும்பக் கட்டுப்பாட்டை அனுமதிக்கவில்லை என்பார்கள். ஆனால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கக்கூடாது.

இவ்வாறு சட்டம் கொண்டுவரவில்லையென்றால், கலாச்சார வேறுபாடுகளின் அடிப்படையில், 1947ஆம் ஆண்டைப்போல் மற்றுமொரு தனி நாடு வேண்டும் என்று கோரிக்கை எழும்.

எனவே, 2 குழந்தைகளுக்கு மேலே வைத்துள்ள தம்பதிகளின் வாக்குரிமையை ரத்துசெய்ய வேண்டும்’ என்று பேசியுள்ளார் கிரிராஜ் சிங்.

Comments are closed.