இரத்தக் கறை படிந்த ராமர் கோவில் வேண்டாம்: அயோத்யா பூசாரி மகாந்த் கயான் தாஸ்

0

அயோத்யாவின் ஹனுமான் கர்ஹி கோயிலின் தலைமை பூசாரியான மகாந்த் கயான் தாஸ் இரத்தக் கறை படிந்த ராமர் கோவில் தங்களுக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து கூறிய அவர், ராமர் எப்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறாரோ அப்போது ராமர் கோவில் கட்டப்படும் என்றும் விஷ்வ ஹிந்து பர்ஷத் போன்ற அமைப்புகள் எப்போதும் அதை கட்ட மாட்டார்கள் என்று கூறியுள்ளார். இவர்கள் ராமர் கோவில் பெயரை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள் என்றும் சிலர் இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்நாட்டில் வாழும் அனைவரும் ஹிந்துஸ்தானிகள் தான் என்றும் ஆனால் சிலர் மக்களை ஜாதியின் பெயராலும் மத்தத்தின் பெயராலும் மோத விடுகின்றனர் என்று கூறியுள்ளார்.

Comments are closed.