இராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் இளைஞரின் காவல்நிலைய மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை!

0

ஆகஸ்ட் 08, 2016
சென்னை 

பத்திரிகை செய்தி

இராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் இளைஞரின் காவல்நிலைய மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை!

இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே மாயாகுளத்தைச் சேர்ந்த சேக் அலாவுதீன் என்ற நபர் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பி ஓடி திருப்புல்லானி அருகே உள்ள தோனி பாலத்திலிருந்து விழுந்து அடிபட்டதாகவும், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது இறந்ததாகவும் காவல்துறையால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கூறப்படும் சேக் அலாவுதீன் கடந்த 02/08/2016 அன்று செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் ஏர்வாடி காவல்நிலைய காவல் அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அன்றிலிருந்து அவருடைய செல்ஃபோன் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்கள் ஏர்வாடி, திருப்புல்லானி உட்பட பல காவல் நிலையங்களில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றது.

சேக் அலாவுதீன், காவல்துறையால் விசாரனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், விசாரனையின்போது உடல்நிலை மோசம் அடைந்து இறந்தது போன்ற எந்த தகவலும் சம்மந்தப்பட்டவரின் குடும்பத்திற்கு காவல்துறையால் தெரிவிக்கப்படாதது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சேக் அலாவுதீன் உடலில் கடுமையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்கள் உள்ளன. எனவே இது காவல்துறையால் திட்டமிட்டு நடத்தப்பட்ட காவல்நிலைய மரணம் என சந்தேகம் எழுகிறது.

எனவே இச்சம்பவத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தி உன்மையை வெளிப்படுத்தவும்,  வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் கொண்ட குழுவைக்கொண்டு பிரேதப் பரிசோதனை நடத்தவும், சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவும், சம்மந்தப்பட்டவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு
 ஜெ . முகம்மது ரசின்,
மாநில செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Comments are closed.