இருமுறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவ சீட் கிடைக்காததால் மாணவி தற்கொலை!

0

இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவ சீட் கிடைக்காததால் கீர்த்தனா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெரம்பலூரில் அரசுப் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் செல்வராஜ். இவரது மகளான கீர்த்தனா, கடந்த ஆண்டு நடைபெற்ற +2 தேர்வில் 1053 மதிப்பெண்கள் எடுத்தார். இந்நிலையில் கடந்து முறை எழுதிய நீட் தேர்வில் 202 மதிப்பெண்கள் எடுத்ததால் அவரால் மருத்துவப் படிப்புக்கு செல்ல இயலவில்லை.

பின்னர் சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில், இந்தாண்டு முழுவதும் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று, 2019ஆம் ஆண்டு நீட் தேர்வில் 384 மதிப்பெண்கள் எடுத்தார். அதனால், இந்த ஆண்டும் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

அதேசமயம், குறைவான மதிப்பெண் பெற்ற அவரது தோழிக்கு சீட் கிடைத்துள்ளது.

இதனால் கடும் மன உளைச்சலுக்குள்ளான கீர்த்தனா, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை போலீசாருக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்ய அவரது உறவினர் முயன்றுள்ளனர். இதனை அறிந்த போலிசார் கீர்த்தனாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.