இரோம் ஷர்மிலாவிற்கு அடைக்கலம் கொடுக்க செஞ்சிலுவை சங்கம் முடிவு

0

மணிப்பூரில் AFSPA சட்டத்தினை திரும்பப் பெற வேண்டி 16 வருடங்கள் உண்ணா விரதமிருந்த இரோம் ஷர்மிளா சமீபத்தில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதோடு அரசியலில் இறங்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார். அனால் இத்துனை வருடங்களாக எந்த மக்களுக்காக உண்ணா விரதம் இருந்தாரோ அந்த மக்களே அவரை தற்போது ஏற்றுகொள்ள மறுக்கின்றனர்.

அவர் உண்ணாவிரத்தத்தை கைவிட்டது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அவருக்கு அடைக்கலம் கொடுக்கவும் எவரும் முன்வரவில்லை. இரோம் ஷர்மிளா இஸ்கான் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்ட போது கோவில் நிர்வாகம் அவருக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்துவிட்டது.  தனது லட்சியமான AFSPA சட்டம் திரும்பப் பெறப்படும் வரை தனது பெற்றோரை சென்று பார்க்கப்போவதில்லை என்று அவர் கூறியிருந்தார். இறுதியில் அவர் முன்னதாக அனுமதிக்கபப்ட்டிருந்த தந்து மருத்துவமனை படுக்கைக்கே அழைத்துச் செல்லப்பட்டார்.

தற்போது அவருக்கு எவரும் அங்கு அடைக்கலம் கொடுக்க முன்வராத நிலையில், அவருக்கு செஞ்சிலுவைச் சங்கம் அடைக்கலம் கொடுத்துள்ளது. இரோம் ஷர்மிலாவிற்கு வாழ்வதற்கு சரியான ஒரு இடம் கிடைக்கும் வரையில் தற்காலிக தங்குமிடமாக அது இருக்கும் என்று கூரியுள்ளது.

இத்துனை வருட காலம் தனது வாழ்வை பொதுமக்களுக்காக அர்பணித்த ஒருவருக்கு மக்களின் இத்தகைய வரவேற்பு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இரோம் ஷர்மிளாவை காண வருபவர்களில் அவருக்கு எதிர்கருத்துக்கள் கொண்டவர்கள் பாதுகாப்பு காரணங்கள் கருதி அவரை காண அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் மக்கள் தன்னிடம் நடந்து கொல்வது குறித்து இரோம் ஷர்மிளா மிகுந்த வேதனையில் உள்ளார் என்றும் தன்னை காண வருபவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் சில நேரங்களில் அழுதுவிடுகிறார் என்றும் மருத்துவமனை ஊழியகள் கூறுகின்றனர்.

மேலும் மக்கள் அவரை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் தன்னை ஒரு உயிர்தியாகியாக வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள் போல என்று ஷர்மிளா கூறியுள்ளார்.

இன்னும் அவருக்கு மருத்துவ காரணங்களுக்காக திடப் பொருட்களை உணவாக வழங்கப்படவில்லை. தற்போது கஞ்சி மற்றும் ஹார்லிக்ஸ் போன்ற திரவ உணவையே அவர் உண்டு வருகிறார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Comments are closed.