இறைத்தூதரை அவமதிக்கும் வாட்ஸ் அப் பதிவு: மத்திய பிரதேசத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கைது

0

மத்திய பிரதேசம் பர்வானி மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத் தலைவர் சஞ்சய் பவ்சார் . இவர் இறைத்தூதர் முகம்மது (ஸல்) குறித்த அவதூறான வாட்ஸ் அப் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இவரது இந்த பதிவு குறித்து அப்பகுதி முஸ்லிம்கள் காவல்துறையில் புகாரளித்தனர். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது இந்திய குற்றப்பிரிவு 295-A மற்றும் ஐ.டி பிரிவு 66 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் இந்துத்துவாவினர் அப்பகுதியில் கடையடைப்பு நிகழ்த்த அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் இந்த அழைப்புக்கு யாரும் செவி சாய்க்கவில்லை என்றும் அப்பகுதியில் இயல்பு நிலை நிலவுகிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை அப்பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் சஞ்செய் பவார் பிணையில் வெளியானதும் அப்பகுதி கூடுதல் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.