இறைதூதரை அவமதித்ததற்காக எகிப்து நீதித்துறை அமைச்சர் அஹ்மெத் அல் ஜென்ட் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்

0

ஜனநாயக முறையில் தேர்ந்தேடுக்கப்பட்ட அதிபர் முஹம்மத் மெர்சியின் ஆட்சி ராணுவ புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டு தன்னைத் தானே அதிபர் ஆக்கிக்கொண்டார் ராணுவ தளபதி சிசி.

இவரது ஆட்சியின் நீதித்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் அஹ்மெத் அல் ஜென்ட். இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினர் மீது கடும் வெறுப்பு கொண்டவர் இவர். ஒரு தொலைகாட்சி பேட்டியில் 4,00,000 இஹ்வான்களை கொலை செய்ய வேண்டும் என்று தனது வெறுப்பை வெளிப்படுத்தியவர்.

தற்பொழுது மற்றுமொரு தொலைகாட்சி நிகழ்ச்சி உரையாடலின்போது இறைத்தூதரை அவமத்திதுள்ளார்.
அந்த தொலைகாட்சி நேர்காணலில், “இறைத்தூதர் என்னை அவமதித்தால் அவரையும் நான் சிறையில் அடிப்பேன்” என்று அஹ்மெத் அல் ஜென்ட் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் மேல் வழக்கறிஞர் அம்ர் அப்தெல் சலாம் புகாரளித்தார். மேலும் இவரது இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

அவர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி அமைச்சர்களின் சபை கேட்டுக்கொண்ட பிறகும் தன் பதவியை ராஜினாமா செய்ய அவர் மறுத்துவிட்டார். இதனையடுத்து கடந்த ஞாயிறு அஹ்மெத் அல் ஜென்ட் அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக எகிப்து பிரதமர் ஷரிப் இஸ்மாயில் அறிவித்தார். மேலும் இவர் மேல் இறைத்தூதரை அவமதித்ததற்காக இரண்டு வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: அஹ்மெத் அல் ஜென்ட்

Comments are closed.