இறைத்தூதரை அவமதித்த பேராசிரியர் கை வெட்டு வழக்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது!

1

கேரள மாநிலம் முவாற்றுப்புழாவில் இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப் படுத்தும் விதமாக அங்குள்ள நியூமன்ஸ் கல்லூரியைச் சார்ந்த பேராசிரியர் டி.ஜே.ஜோசப் ஒரு கேள்வித்தாளை தயாரித்திருந்தார்.இது பெரும் சர்ச்சையையும், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் அவரது கையை சிலர் வெட்டினர்.இச்சம்பவம் தொடர்பாக 31 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பு தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.13 பேரை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ளது.மீதமுள்ள 18 பேரை குற்றமற்றவர்கள் என்று விடுதலைச் செய்துள்ளது.தண்டனை மே 5-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

Discussion1 Comment

  1. சாதாரண கைவெட்டு சம்பவத்திற்கு NIA விசாரணையை முடிக்கி விட்டு தீர்ப்பும் வழங்கும் தேதி அறிவித்தாயிற்று
    ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தவன் எல்லாம் நாட்டின் பிரதமராக வீற்றிருக்கிறான்
    வாழ்க பாரத சமுதாயம் வாழ்க
    வளர்க அதன் நீதி!