இலங்கையில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

0

இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் தொடர்ச்சியான தீவிரவாத சம்பவங்களை அடுத்து, தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இலங்கையில் மேலும் தாக்குதல்களை நிகழ்த்த தீவிரவாத கும்பல் திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆகையால், இலங்கையில் பணிபுரியும் தங்கள் நாட்டுக் குடிமக்கள், 12ஆம் வகுப்பு வரை படிக்கும் தங்கள் பிள்ளைகளை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதேபோல் பிரிட்டன் அரசாங்கமும் தங்கள் நாட்டு மக்கள் தேவையின்றி இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Comments are closed.