இலங்கையில் ஒரு சிவசேனா

0

ஸ்ரீலங்காவில் இந்துக்களை மற்ற மதத்தினரிடம் இருந்து பாதுகாக்க இந்துக்களின் குழு ஒன்று சிவசேனா அமைப்பினை துவங்கியுள்ளது.

தமிழர்கள் அதிகம் வாழும் வவுனியாவில் வைத்து இந்த அமைப்பின் துவக்க விழா நடைபெற்றுள்ளது. ஸ்ரீலங்காவின் சிவ சேனாவிற்கும் இந்திய சிவ சேனாவிற்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை என்று கூறிக்கொள்ளும் இந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு தங்களுக்கு மகாராஷ்டிர சிவ சேனாவின் ஆதரவு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் இந்த அமைப்பு ஸ்ரீலன்காவின் மதமாற்ற தடை சட்டம் குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பல சிவ சேனா, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., கோவாவை மையமாகக் கொண்ட ஹிந்து ஜனா ஜாக்ருதி சமிதி ஆகிய அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகே தங்களது இந்த அமைப்பு துவங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

தங்களின் இந்த அமைப்பிற்கு பல பெயர்களை தாங்கள் ஆலோசித்தாலும் ஸ்ரீலங்காவில் உள்ள பெரும்பான்மை இந்துக்கள் சிவ பக்தர்கள் என்பதால் தாங்கள் இந்த பெயரை தேர்ந்தெடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

மறவன்புலவுவை பொறுத்தவரையில், ஸ்ரீலங்காவில் வசிக்கும் இந்துக்களுக்கு பிர மதத்தவர்களினால் பெரும் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் சிங்கள பெளத்த காலனியாதிக்கத்தை ஆதரிக்கின்றது என்றும் இங்கு மதமாற்றம் இந்துக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் உள்ள முஸ்லிம்களுக்கு ஈரான் மற்றும் ஈராக்கில் இருந்து நிதியுதவிகள் வருகின்றது என்றும் கிறிஸ்தவர்களுக்கு மேற்கத்திய மிஷனரிகளிடம் இருந்து நிதியுதவி வருகிறது என்றும் இந்துக்கள் மட்டும் தான் எந்தவித ஆதரவும் இல்லாமல் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

தங்களின் இந்த முயற்சிக்கு, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., மற்றும் பா.ஜ.க., விடமிருந்து மிகுந்த ஆதரவு கிடைத்திருப்பதாகவும் தான் இந்த அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து இது குறித்து விரிவாக விவாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் மிகப்பெரிய மத சிறுபான்மையினராக இந்துக்கள் இருகின்றனர் என்று கூறும் அவர் சச்சிதானந்தன், தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், திரிகோணமலை மதத் தலைவர் தென் கைலாய ஆதீனம் ஆகியோர் 25 மாவட்டங்களிலும் இந்துக்களை பாதுகாக்க பணிசெய்வதாக கூறியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பின் உருவாக்கம் தமிழ் தேசிய கூட்டணியில் கருத்து வேறுபாட்டை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது. தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன், மதத்தை அரசியலில் புகுத்துவதோ அல்லது மதத்தை அரசியலாக்குவதையோ தங்கள் கட்சி எதிர்கிறது என்று கூறியுள்ளார். “இந்தியாவில் சிவ சேனையின் வரலாற்றை பார்க்கையில் இது சிறந்த முடிவல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிர சிவ சேனா கட்சியிடம் கருத்துக் கேட்கப்பட்ட போது, அதன் மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷால் பிரதான் இப்படி ஒரு அமைப்பு தங்கள் பெயரில் இருப்பதைப் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். தமிழ் நாட்டில் தங்களுக்கு கிளைகள் உண்டு என்றும் ஆனால் ஸ்ரீலங்காவில் தங்களின் அமைப்பின் கிளைகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அங்கிருந்து யாரும் தங்களின் கிளை தொடங்குவது குறித்து தங்களிடம் அனுமதி கேட்டு இதுவரை தங்களை அணுகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே வேலை சிவ சேனாவின் ராஜ்யசபா எம்.பி.யான சஞ்சய் ரவுட், ஸ்ரீலங்கா தமிழ் சமூகத்தினர் சிவ சேனை அமைப்பினை அங்கு தொடங்கியிருப்பதாகவும் தங்கள் கட்சியின் கொள்கை வேலைகளை சிவ சேனையின் ஆதரவுடன் செயல்படுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.