இலங்கையில் பதற்றம்: முஸ்லீம்களின் வாகனம், கடைகள் மீது தாக்குதல்!

0

இலங்கையில், ஈஸ்டர் தினத்தன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்த நகரில், இஸ்லாமியர்களின் கடைகள் மற்றும் ஒரு வாகனம் கிறிஸ்தவர்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குண்டுவெடிப்புக்கு உள்ளான ஒரு நகரம் நெகோம்போ. இங்குள்ள தேவாலயத்திலும் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் சுமார் 100 பேர் பலியாகினர். இந்த நகரின் அருகேயுள்ள போருடோடா கிராமத்தில், முஸ்லீம்கள் மீது திடீரென இப்போது வன்முறை தாக்குதல் அறங்கேறியுள்ளது.

இதையடுத்து, முஸ்லீம் இளைஞர் ஓட்டிச் சென்ற வாகனம் அடித்து நொறுக்கப்பட்டதோடு, முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகளும் அப்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதுபற்றி, இலங்கை காவல்துறை செய்தி தொடர்பாளர், ருவான் குணசேகரா கூறுகையில்: “குடிகாரர்கள் குழுவிற்கு நடுவேயான மோதல்தான், இறுதியில், கலவரமாக மாறியது. கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது”. என தெரிவித்தார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்ட அறிக்கையொன்றில், இந்த கலவரத்தில் உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “மது போதை, மனிதர்களை மிருகத்தைவிட மோசமாக்கிவிடும். மோதல் சம்பவத்திற்கு காரணம், மதுபோதையில் இருந்த கும்பல்தான். ஆகையால், குறிப்பிட்ட பகுதியில் மதுக் கடைகளை மூட வேண்டும்” என்றார்.

இலங்கையில் நடந்த, தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து, முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் இரவு நேரங்களில் முஸ்லீம்கள் வசிக்கும் வீடுகளின் மீது மர்ம நபர்கள் கல்வீசி செல்லும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.