இலங்கையில் மீண்டும் ராஜபக்க்ஷ யுகம்

0

இலங்கையில் மீண்டும் ராஜபக்க்ஷ யுகம்

கடந்த மாதம் 18ம் தேதி திங்கட்கிழமை புராதன இலங்கையின் தலைநகரான அநுராதபுரத்திலுள்ள ருவன்வெலிசாய என்ற முக்கிய பௌத்த வணக்கத்தலத்தில் நிகழ்ந்த பதவியேற்பு நிகழ்வில் இலங்கையின் புதிய அதிபராக கோட்டாபய ராஜபக்க்ஷ  பதவியேற்றுக்கொண்டார். “ருவன்வெலிசாய” அநுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு நீண்டகாலம் ஆட்சிசெய்த எல்லாளன் என்ற தமிழ் மன்னனை, தெற்கிலிருந்து புறப்பட்ட சிங்கள அரசனான துட்டுகெமுணு வீழ்த்திய பின் கட்டியெழுப்பிய பௌத்த ஸ்தூபியாகும். புலிகளைத் தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் ஜனாதிபதி கோட்டாபயவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்க்ஷ நவீன இலங்கையின் துட்டுகெமுணுவாக தன்னை சித்தரித்துக் கொண்டார். வரலாற்றில் ஆச்சரியப்படத்தக்க விதமாக துட்டுகெமுணுவினது சேனாதிபதியின் பெயரும் மஹிந்தவினது பாதுகாப்பு செயலராக விளங்கியவரது பெயரும் கோட்டா என்பதை பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். மஹிந்தவின் பாதுகாப்புச் செயலர் இன்று நாட்டின் அதிபர் ஸ்தானத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்.

தனது பதவியேற்பு உரையின் போது சிறுபான்மை மக்கள் குறித்து அதிபர் கோட்டாபய குறிப்பிட்ட விசயங்கள் பல்வேறு கோணங்களில் நோக்கப்படுகிறது. “சிங்கள வாக்குகள் மூலம் மட்டுமே நான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்பதை நான் தெரிந்திருந்தேன். எனவே வடக்கு, கிழக்கு மக்களையும் எனது வெற்றியில் பங்கெடுக்குமாறு கோரினேன். எனினும் அவர்கள் எம்மைப் புறக்கணித்து போதுமான ஆதரவைத் தந்திருக்கவில்லை” என்ற கருத்தை அவர் வலியுறுத்திச் சொல்லியிருந்ததோடு அநேக பத்திரிகைகளது முன்பக்கச் செய்தியை அத்தலைப்பு பெற்றிருந்தது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.