இலங்கையில் முகத்திரை அணிய தடை: இஸ்லாமியர்கள் கொந்தளிப்பு!

0

இலங்கையில் கடந்த 21ஆம் தேதி தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றது. 8 இடங்களில் நடைபெற்ற இந்த தாக்குதலில் சிக்கி 300க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகிவிட்டனர். இன்னும் 500 பேர் காயமடைந்தனர். உலகை உலுக்கிய இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் மீண்டும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் தீவிர டசோதனை நடைபெறுகிறது.

இந்த நிலையில் இலங்கையில் மேற்கொண்டு தீவிரவாத தாக்குதல்களை தடுக்கும் விதமாக மற்றொரு உத்தரவை அதிபர் பிறப்பித்துள்ளார். இலங்கையில் அடையாளத்தை மறைக்கும் வகையில், முக திரைகள், மாஸ்க்கள், போன்றவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு மக்களை எளிமையாக அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பு கருதியும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவுடன் முகத்திரையை தடை செய்ததால் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். ஒரு சமூகத்தின் காரியங்களில் அரசு தலையிடுவது மிக தவறான இன்று என கூறி வருகின்றனர்.

Comments are closed.